Stock Market Update: இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.


இன்று மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 786.74 புள்ளிகள் அதிகரித்து 60,746.59 ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 225.40 புள்ளிகள் அதிகரித்து 18,012.20 புள்ளிகளாக உள்ளது.






 இன்று காலை மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 563.09 புள்ளிகள் அதிகரித்து 60,522.94 ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 161.55 புள்ளிகள் அதிகரித்து 17,948.35 புள்ளிகளாக இருந்த நிலையில், ஏற்றத்துடன் முடிவடைந்த பங்கு சந்தையில் நிஃப்டி 18 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சென்றது.


இந்நிலையில், உலகளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக பெரும் வீழ்ச்சியில் சென்றிருந்த பங்குச் சந்தைகள், கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வருவதால், முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளன. 


லாபம்- நஷ்டம்


எச்டிஎஃப்சி, பஜாஜ், ட்ரெண்ட், ஸ்ரீ சிமெண்ட், ஜெ.கே.சிமெண்ட், டால்மியா பாரத், எம்&எம், அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன


இன்டல்லேக் டிசைன், பந்தன் பாங்க், எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், எம்&எம் ஃபைனனான்சியல், பிரிட்டானியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


மத்திய வங்கிகள் கூட்டம்:


இந்நிலையில், அமெரிக்க மத்திய வங்கி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி கூட்டம் இந்த வாரத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் வட்டி விகிதத்தில் குறைப்பது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் சற்று ஏற்றம் கண்டு வருகிறது.


மேலும், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ரஷ்யா - உக்ரைன் போர், கொரோனா தொற்று காரணமாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. தற்போது சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கச்சா எண்ணெய் தேவை குறைய வாய்ப்புள்ளதால், கச்சா எண்ணெய்யின் விலை குறையும் சூழல் உள்ளது. 


ரூபாய் மதிப்பு நிலவரம்