Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடந்துள்ளது.
வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 213.27 அல்லது 0.33 % புள்ளிகள் உயர்ந்து 65,433.30 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 47.55 அல்லது 0.25 % புள்ளிகள் சரிந்து 19,444.00 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
அதானி எண்டர்பிரைசர்ஸ், ஐ.டி.சி., ஹீரோம் மோட்டர் கார்ப், உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்தது. வங்கி, மெட்டல் இண்டர்ஸ்ட்ரீஸ், உணவு துறை உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன.
லாபத்துடன் வர்த்தமான நிறுவனங்கள்
ஹிண்டால்கோ, ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, லார்சன், டிவிஸ் லேப்ஸ், டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ. லைப் இன்சுரன்ஸ், மாருதி சுசூகி, கோடாக் மஹிந்திரா வங்கி, பவர்கிரிட் கார்ப், சிப்ளா, பஜார்ஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டி லேப்ஸ், நெஸ்லே, அப்பல்லோ மருத்துவமனை, ரிலையன்ஸ், டி.சி.எஸ்., பஜார்ஜ் ஃபினான்ஸ், ஜெ.எஸ்.டபுள்யூ., ஈச்சர் மோட்டர்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, கோல் இந்தியாம் பிரிட்டானியா, என்.டி.பி.சி., உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ்ம் சன் ஃபார்மா, பாரதி ஏர்டெல், டெக் மஹிந்திரா, டாடா மோட்டர்ஸ், ஐ.டி.சி. எம் அண்ட் எம், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா கான்ஸ் ப்ராட்., க்ரேசியம், ஏசியன் பெயிண்ட்ஸ், விப்ரோ, ஓ.என்.ஜி.சி., டைட்டன் கம்பெனி, ஹுரோ மோட்டர்கார்ப், என்.டி.பி.சி.,ஹெச்.டி.எஃப்.சி., லைஃப்,ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.
இன்று (23/08/2023) காலை சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில் ஏற்றத்துடன் முடிவடைந்தது. தி பவர் ட்ரான்ஸ்மிசன் அண்ட் டிஸ்டிபுயூசன், லார்சன் அண்ட் டர்போ உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் புதிய ஆர்டர்களை பெற்றது.
3.46 மணி நிலவரப்படி, 2,016 பங்குகள் உயர்ந்திருந்தன. 1,487 பங்குகளின் மதிப்பு குறைந்தது. 156 மாற்றமின்றி தொடர்ந்தது.
இந்திய ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா உயர்ந்து 82.68 ஆக இருந்தது. இது செவ்வாய்கிழமை 82.93 ஆக இருந்தது.
இந்திய பங்குச்சந்தை மதிய நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமானது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.