Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடந்துள்ளது. 


வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 243.65 அல்லது 0.38 % புள்ளிகள் உயர்ந்து 65,189.18 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 69.00 அல்லது 0.31 % புள்ளிகள் சரிந்து 19,377,25 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.


வாரத்தின் முதல் நாளான இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபினான்ஸ், பவர்கிரிட், அதானி எண்டர்பிரைசர்ஸ் மற்றும் ஹிண்டால்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்தது.


லாபத்துடன் வர்த்தமான நிறுவனங்கள்


பஜாஜ் ஃபினான்ஸ், அதானி போர்ட்ஸ், பவர்கிரிட் கார்ப், அதானி எண்டர்பிரைசர்ஸ், ஹிண்டால்கோ, இந்தஸ்லேண்ட் வங்கி, பாரதி ஏர்டெல், அப்பல்லோ மருத்துவமனை, ஐ.டி.சி., பஜாஜ் ஃபின்சர்வ், என்.டி.பி.சி.,யு.பி.எல்.,இன்ஃபோசிஸ், ஆக்ஸிஸ் வங்கி, கோல் இந்தியா, க்ரேசியம், ஜெ.எஸ்.டபுள்யு., டாடா ஸ்டீல், டைட்டன் கம்பெனி, டாடா மோட்டர்ஸ், விப்ரோ,டெக் மஹிந்திரா, டாக்டர்.ரெட்டிஸ் லேப்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ்ம் கோடாக் மகேந்திரா வங்கி, ஈச்சர் மோட்டர்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஓ.என்.ஜி.சி., டிவிஸ் லேப்ஸ், சன் பார்மா, ஹீரோ மோட்டர்கார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட்  ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


ரிலையன்ஸ், எம் அண்ட் எம், பிரிட்டானியா, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, சிப்ளா, மாருதி சுசூகி, பஜார்ஜ் ஆட்டோ, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.


டாடா பவர் கம்பெனி 4.22% உயர்ந்து ரூ.239.80 மதிப்பில் ஒரு பங்கு விற்பனையானது. காலை வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் 40.17 புள்ளிகள் உயர்ந்தது. 64 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமான சென்செக்ஸ் மதிய வர்த்தக நேர முடிவில் 65 ஆயிரத்தை கடந்தது. 


3.46 மணி நிலவரப்படி, 2060 பங்குகள் உயர்ந்திருந்தன. 1558 பங்குகளின் மதிப்பு குறைந்தது. 167 மாற்றமின்றி தொடர்ந்தது. 


இந்திய ரூபாயின் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.11 ஆக இருந்தது. இது கடந்த வெள்ளிக்கிழமை 83.10 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 


இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளே ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.