Stock Market Update:


இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. 


வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 552.62 அல்லது 0.86% புள்ளிகள் உயர்ந்து 65,367.02 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 172.85 அல்லது 0.88 % புள்ளிகள் சரிந்து 19,422.95 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


என்.டி.பி.சி., ஓ.என்.ஜி.சி.,ஜெ.எஸ்.டபுள்யு., மாருதி சுசூகி, பவர்கிரிட் கார்ப், டாடா ஸ்டீல்,கோல் இந்தியா, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, விப்ரோ,டெக் மஹிந்திரா,ஈச்சர் மோட்டர்ஸ், பஜாஜ் ஃபினான்ஸ், ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டர்ஸ், அதானி எண்டர்பிரிசிஸ், ஹெச்.சி.எல். டெக்., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பாரதி ஏர்டெல், டி.சி.எஸ்., பஜாஜ் ஆட்டோ, அதானி போர்ட்ஸ், இன்ஃபோசிஸ், கோடாக் மஹிந்திரா, பிரிட்டானியா, டைட்டன் கம்பெனி, ஹீரோ மோட்டர்கார்ப், ரிலையன்ஸ், லார்சன், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


சிப்ளா,ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், டாக்டர்.ரெட்டிஸ் லேப்ஸ், நெஸ்லே, அல்ட்ராடெக் சிமெண்ட், சன் பாஃர்மா, ஹெச்.யூ.எல்., உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.


இந்த வாரத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 500 புள்ளிகள் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட பங்குச்சந்தை, வார இறுதி நாளில் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. 1883 பங்குகளின் மதிப்பு உயர்ந்திருந்தன. 1209 பங்குகள் சரிந்தன. 103 பங்குகள் மாற்றமின்றி தொடர்ந்தன. 


கெயில் இந்தியா பங்குகள் மதிப்பு உயர்ந்தது. மாத அளவில் மாருதி சுசூகி இந்தியா மிக அதிகபட்ச விற்பனையை பதிவு செய்துள்ளது. 1,89,082 கார்கள் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆன்லைன் டெலிவரி முறைகள் அதிகரிக்க வரும் நிலையில், மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஃபில்ப்கார்ட் உடன் இணைந்து புதிய வகையிலான வணிக ஒப்பந்தத்தை கையெடுத்திட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ஆட்டோமொபைல் துறை அதிக வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசூகி உள்ளிட்ட நிறுவனங்கள் மாத அளவு அதிக விற்பனை அதிகரித்துள்ளது. 


03.31 மணி நிலவரப்படி, நிப்ஃடி 19,400 ஆக உயர்ந்துள்ளது. 2103 பங்குகள் மதிப்பு உயர்ந்தது. 1456 பங்குகள் சரிந்தன. 108 பங்குகள் மாற்றமின்றி தொடர்ந்தன. ஃபார்மா துறையை தவிர மற்ற எல்லா துறைகளின் பங்குகளும் உயர்வுடன் வர்த்தகமாகின.


ராயல் என்ஃபீல் புத்தம் புதிய புல்லட் 350 மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது ஜே.-சீரிஸ் எஞ்சின் மாடலில் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. 


இந்திய ரூபாய் மதிப்பு:


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.82.71 ஆக இருந்தது. கடந்த வர்த்தக நாளில் ரூ.82.78 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.