Share Market Closing Bell: வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.
வர்த்த நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 529.03 அல்லது 0.80 % புள்ளிகள் அதிகரித்து 66,589.93 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 146.95 அல்லது 0.75% புள்ளிகள் உயர்ந்து 19,711.45 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்செக்ஸ் 66 ஆயிரம் புள்ளிகள் கடந்து வர்த்தகமாகி புதிய சாதனை படைத்துள்ளது. பாரத் ஸ்டேட் வங்கி, விப்ரோ, க்ரேசியம், ரிலையன்ஸ்< கொடாக் மகேந்திரா வங்கி, டெக் மகேந்திரா, அப்பல்லோ மருத்துவமனை, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகியது.
பங்குச்சந்தை லாபத்துடன் வர்த்தமாகியது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக முதலீட்டாளர்கள், வெளிநாட்டில் இருந்து முதலீடுகள் அதிகம் வருவதால் சென்செக்ஸ் 65 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தமாகியது.
லாபத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்:
எஸ்.பி.ஐ., ஹெட்ச்.டி.எஃப்.சி., என்.டி.பி.சி., டாகடர், ரெட்டி லேப்ஸ், விப்டோ, க்ரேசியம், ரிலையன்ஸ், கோடாக் மகேர்ந்திரா வங்கி, அதானி எண்டர்பிரைசர்ஸ்., டெக் மகிந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, அல்ட்ராடெல் சிமெண்ட், அதானி போர்டஸ், மாருதி சுசூகி, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகி வருகிறது.
நஷ்டத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்:
டி.சி.எஸ். பஜார்க் ஆட்டோ, டைட்டன் கம்பெனி, பாரதி ஏர்டெல், ஜெ.எஸ்.டபுள்யு. டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, நெஸ்லே, பஜார்ஜ் ஃபின்சர்வ், டிவிஸ் லேப், ஐ.டி.சி. லார்சன், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தில் வர்த்தகமாகிறது.