வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 874.94 அல்லது 1.11% புள்ளிகள் உயர்ந்து 79,468.01 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 304.95 அல்லது 1.27% புள்ளிகள் உயர்ந்து 24,297 ஆக வர்த்தகமாகியது.


காலை 10:00 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,046 புள்ளிகளும் நிஃப்டி 225 புள்ளிகளும் உயர்ந்திருந்தது. 


இரண்டு நாட்களுக்கு முன்பு, பங்குச்சந்தை கடும் சரிவடைந்தது.  சென்செக்ஸ் 2,432.11 அல்லது 2.38% புள்ளிகள் சரிந்து 78,688.98 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 708.85 அல்லது 2.87% புள்ளிகள் சரிந்து 24,008.85 ஆக வர்த்தகமாகினது.வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பொருளாதார நிலை ஏற்படும் அச்சம், அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்பு நிலை மோசமடைந்தது, அந்நாட்டில் வேலையின்மை ரேட் 4.3 சதவிகிதம் உயர்வு  உள்ளிட்ட காரணங்களால் ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா அகிய நாடுகளிலும் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தது. 


இந்திய பங்குச்சந்தை எழுச்சி:


நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்ந்தது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பும் பின்பும் பங்குச்சந்தை வரலாற்று உச்சம் தொட்டது. சென்செக்ஸ் 81 ஆயிரம் புள்ளிகளும் நிஃப்டி 25 ஆயிரம் புள்ளிகளும் வர்த்தகமாகியது. அதே இந்த வார தொடக்கத்தில் 25000 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ் 79 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 


பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்திக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தற்போது ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. அதற்கு முக்கியமாக 5 காரணங்கள் சொல்லப்படுகிறது. 


பேங்க் ஆஃப் ஜப்பானின் துணை ஆளுநர் சினிசி உசிடா மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்காது என்று அறிவித்துள்ளார். 


ஜப்பான் Nikkei 2% உயர்ந்தது ஆசிய சந்தையில் வர்த்தகம் க்ரீனில் இருக்க உதவியது. அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானின் யென் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது, அமெரிக்க சந்தையில் நிலவும் நேர்மறையான சூழல், மத்திய கிழக்கு நாடுகளில் போர் எழும் சூழல் இப்போதைக்கு இல்லை ஆகிய காரணங்களால் பங்குச்சந்தை சரிவிலிருந்து மீண்டுள்ளது.  


லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:


ஓன்.என்.ஜி.சி., கோல் இந்தியா, அதானி எண்டர்பிரைசிஸ், அதானி போர்ட்ஸ், பவர்கிரிட் இந்தியா, ஸ்ரீராம் ஃபினான்ஸ், பஜாஜ் ஆட்டோ, பி.பி.சி.எல்., ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், டிவிஸ் லேப்ஸ், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், ஹிண்டால்கோ, மாருதி சுகூகி, அல்ட்ராடெக் சிமெண்ட், எல்.டி.ஐ. மைண்ட்ட்ரீ, எம் & எம், லார்சன், விப்ரோ, சன் ஃபார்மா, பஜாஜ் ஃபினான்ஸ், சிப்ளா, ஹெ.டி.எஃப்sஇ., ஐ.டி.சி., ஹீரோ மோட்டர்கார்ப், டாடா மோட்டர்ஸ், அக்சிஸ் வங்கி, அப்பல்லோ மருத்துவமனை, டி.சி.எஸ்., க்ரேசியம், ரிலையன்ஸ்,  நெஸ்லே, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோடாக் மிஹிந்திடா வங்கி, என்.டி.பி.சி. ஆகிய நிறுவனங்கள் மட்டும் லாபத்துடன் வர்த்தகமாகின. 


இந்தஸ்லேண்ட் வங்கி, ஈச்சர் மோட்டர்ஸ், டெக் மஹிந்திரா, பிரிட்டானியா, டைட்டன் கம்பெனி, ஹெ.யு.எல்., பாரதி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.