இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. 


இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை  இறக்கத்துடன் வர்த்தகமாகி வந்தது.


வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 746.81 அல்லது 0.92 % புள்ளிகள் சரிந்து 78,929.79 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 213.65  அல்லது 0.88% புள்ளிகள் சரிந்து 24,133.90 ஆக வர்த்தகமாகியது.


அதானி குழுமம், பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி தலைவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையால் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளில் காலையில் இருந்து அதானி குழுமத்தின் பங்குகள் 7% வரை சரிந்தன. இருப்பினும் அதன் தாக்கம் பங்குச்சந்தையில் பெரிதாக இல்லை என்று பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். 


இருப்பினும் இரண்டாவது நாளாக பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. வங்கி துறை, ரியல் எஸ்டேட் துறை இரண்டும் கடும் சரிவை சந்தித்தது. நாட்டின் பிரபல தனியார் துறை வங்கி ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்கு மதிப்பு 2% சரிந்தது. அடுத்த செசனில் பங்குச்சந்தை ஏற்றம் காணும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:


டைட்டன் கம்பெனி, அப்பல்லோ மருத்துவமனை, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், டாடா கான்ஸ் ப்ராட், நெஸ்லே, பிரிட்டானியா, ஹெச்.சி.எல்., டெக், சன் ஃபார்மா, விப்ரோ, ரிலையன்ஸ், எம்&எம் ஆகிய நிறுவனங்கள் மட்டும் லாபத்துடன் வர்த்தகமாகின. 


பி.பி.சி.எல்., ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஸ்ரீராம் பினான்ஸ், டாடா ஸ்டீல், க்ரேசியம்,  எஸ்.பி.ஐ., டாடா மோட்டர்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ், ஓ.என்.ஜி.சி., ஹீரோ மோட்டர்கார்ப், ஹிண்டால்கோ, பவர்கிரிட் கார்ப், என்.டி.பி.சி., அதானி போர்ட்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஏசியன் பெயிண்ட்ஸ், கோடாக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், மாருதி சுசூகி, ஐ.டி.சி., டெக் மஹிந்திரா, லார்சன், கோல் இந்தியா, டிவிஸ் டேப்ஸ், பஜாஜ் ஆட்டோ, அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ்,  ஆக்சிஸ் வங்கி, சிப்ளா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஈச்சர் மோட்டர்ஸ், டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.