இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 390.34 அல்லது 0.48% புள்ளிகள் உயர்ந்து 81,884.80 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 115.15 அல்லது 0.46% புள்ளிகள் உயர்ந்து 25,035.40 ஆக வர்த்தகமாகியது.
சர்வதேச சந்தையில் க்ரீனில் இருப்பதால் ஆசிய பங்குச்சந்தையும் அதற்கேற்றவாறு ஏற்றத்தில் உள்ளது. அமெரிக்காவில் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 25 பேசிஸ் பாயிண்ட்கள் குறைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் ஆண்டு பணவீக்கம் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதில், பணவீக்கம் 0.4 சதவீதம் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், உணவு மற்றும் எரிசக்த்தி உள்ளிட்டவற்றின் பணவீக்கம் 0.3 சதவீதம் அதிகரித்துள்ளதையும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு அதிகம் இருப்பதால் முதலீட்டாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் வர இருப்பாதால் தேர்தல் விவாதங்களை முதலீட்டாளர்கள் தீவிரமாக கவனித்து வருகின்றனர். புதிய திட்டகள் அறிவிக்கப்படுமா,நிதி கொள்கைகளில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து சிலர் யோசித்து வருகின்றனர். அதோடு, ஐரோப்பிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் குறித்த முடிவும் கவனிக்கும்படியான ஒன்றாக இருக்கிறது.
இந்தியாவின் ஜூலை மாத Index of Industrial Production (IIP), ஆகஸ்ட் மாதத்திற்கான the Consumer Price Index (CPI) உள்ளிட்ட மாதாந்திர அறிக்கை இன்று (12.09.2024) வெளியீட்டை முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
அதானி போர்ட்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல், ஸ்ரீராம் ஃபினான்ஸ், பாரதி ஏர்டெல், கோடாக் மஹிந்திரா, டெக் மஹிந்திரா, பி.பி.சி.எல்., சிப்ளா, ஹிண்டால்கோ, விப்ரோ, என்.டி.பி.சி., எஸ்.பி.ஐ., ஈச்சர் மோட்டர்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், பவர்கிரிட் கார்ப், ஓ.என்.ஜி.சி., பிரிட்டானியா, ஹெச்.சில்.எல். டெக், டாடா கான்ஸ் ப்ராட், ஹீரோ மோட்டர்கார்ப், க்ரேசியம், டைட்டன் கம்பெனி,லார்சன், இந்தஸ்லேண்ட் வங்கி, கோல் இந்தியா, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, பஜாஜ் ஃபினான்ஸ், சன் ஃபார்மா, டாக்டர் ரெட்டிஸ் லேப், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐ.டி.சி., டிவிஸ் லேப்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது.
டாடா மோட்டர்ஸ், மாருதி சுசூகி, பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்ஸிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எம்&எம், நெஸ்லே, டி.சி.எஸ்., டிவிஸ் லேப்ஸ், ரிலையன்ஸ் அகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.