இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 930.55% அல்லது 1.15% புள்ளிகள் சரிந்து 80,220.72 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 309.00% அல்லது 1.25% புள்ளிகள் சரிந்து 24,472.10 ஆகவும் வர்த்தகமாகியது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை சரிவுடன் காணப்பட்ட நிலையில், வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்தது.
ஒரு நாளில் ரூ.9 லட்சம் கோடி இழப்பு:
இந்திய பங்குச்ச்ந்தை இந்த வாரம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இந்நிலையில், இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 930 புள்ளிகள் குறைந்தது. பி.எஸ்.இ.-யில் லிஸ்ட் செய்யப்பட்ட ஒட்டுமொத்த நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.453.7 லட்சம் கோடியில் இருந்து ரூ.444.7 லட்சம் கோடியாக குறைந்தது.
பங்குச்சந்தை கடும் சரிவு - காரணம் என்ன?
உலக அளவில் பங்குச்சந்தையில் நிலவும் ஏற்றம் இறக்கம், எதிர்வரும் அமெரிக்க தேர்தலை ஒட்டிய நிலையாமை, foreign portfolio investors பங்குகளை விற்பனை செய்தது ஆகியவை இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
அந்நிய நேரடி முதலீடு குறைந்தது பங்குச்சந்தையில் பிரதிபலித்தது. அந்நிய முதலீட்டாளர்கள் இதுவரை (அக்டோபர் மாதம் வரை) இந்திய ஈக்விட்டி சந்தையில் இருந்து ரூ.82,479 கோடி அளவுக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதுவே ஒரு மாதத்தில் அதிகமாக இந்த அளவுக்கு அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்துள்ளது பதிவாகியுள்ளது. இதற்கு காரணமாக 'sell India, buy China' என்பது பிரபலமாகி வருவது சொல்லப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க பெய்ஜிங் சில திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் இதுவும் ஒன்று. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாக இதுவும் காரணம் என பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ரூபாய் மதிப்பு:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 84.0825 ஆக இருந்தது.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பத்துடன் வர்த்தகமானது.
அதானி எண்டர்பிரைசிஸ், பாரத் எலக்ட்ரிக்கல், எம்&எம், கோல் இந்தியா, டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ., பி.பி.சி.எல்., டாடா மோட்டர்ஸ், ஹிண்டாகோ, இந்தஸ்லேண்ட் வங்கி, க்ரேசியம், ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி., மாருதி சுசூகி, லார்சன், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலஒயன்ஸ், டாடா கான்ஸ் ப்ராட், ஸ்ரீராம் ஃபினான்ஸ், கோடாக் மஹிந்திரா, ட்ரெண்ட், ஏசியன் பெயிண்ட்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, ஹீரோ மோட்டர்கார், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஈச்சர் மோட்டர்ஸ், டைட்டன் கம்பெனி, பிரிட்டானியா, சிப்ளா, ஹெச்.டி.எஃப்.சி., வங்கி எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, சன் ஃபார்மா, விர்போ, அல்ட்ராடெக் சிமென்ட், ஐ.டி.சி., டெக் மஹிந்திரா, நெஸ்லே, இன்ஃபோசிஸ், பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.