இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை நிலவரம்:
பங்குச்சந்தை கடந்த ஒரு வாரமாக சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் பங்குச்சந்தை ஏற்றம் கண்ட நிலையில், மதியத்திற்கு மேல் சரிவடைந்தது. வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 329.92 அல்லது 0.43% புள்ளிகள் சரிந்து 76,190.46 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 118.05 அல்லது 0.49% புள்ளிகள் சரிந்து 23,092.20 ஆகவும் வர்த்தகமாகியது.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
ஹெச்.யு.எல்., பிரிட்டானியா, ஈச்சர் மோட்டஸ், க்ரேஇச்யம், டாடா கான்ஸ் ப்ராட், விப்ரோ, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டெக் மஹிண்ட்ஜிரா, பாரதி ஏர்டெல், பவர்கிரிட் கார்ப், ஐ.டி.சி, நெஸ்லே, ஜெ.எஸ்.டபுள்யு., டி.சி.எஸ்., டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எஃப். சி. லைஃப் ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது.
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், Trent, எம் & எம், பி.பி.சி.எல். சிப்ளா. அதானி எண்டர்பிரைசிஸ், அப்பல்லோ மருத்துவமனை, ஓ.என்.ஜி.சி, டாடா மோட்டர்ஸ், பாரத் எலக்ட்ரிக்கல், ரிலையன்ஸ், லார்சன், ஹீரோ மோட்டர்கார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, அதானி போர்ட்ஸ், ஹெ.சி.எல். டெக்., கோல் இந்தியா, மாருதி சுசூகி, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஏசியன் பெயிண்ட்ஸ், சன் ஃபார்மா, டாடா ஸ்டீல், கோடாக் மஹிந்திரா, ஸ்ரீராம் ஃபினான்ஸ், ஆக்சிஸ் வங்கி, எஸ்.பி.ஐ. ஹிண்டாலோ, பஜாஜ் ஃபினான்ஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 894.2 புள்ளிகள் அதிகரித்து மீண்டும் சரிவடைந்தது. நிஃப்டி 23,100 புள்ளிகளை தொட்டது. ஐ.டி. FMCG ஆகிய துறைகள் ஏற்றத்தில் இருந்தன. நிஃப்டி ஸ்மால்கேப் 100 2.5% சரிவடைந்தது.
நிஃப்டியை பொறுத்தவரையில் ஆட்டோமொபைல், ரியால்டி, ஃபார்மா, வங்கி ஆகிய துறையில் இன்றைய வர்த்தகத்தில் கடும் சரிவை சந்தித்தன. இந்த வாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடந்தது. பங்குச்சந்தை உயர தொடங்கியதை முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகலாம் என்று சொல்லப்படுகிறது.