இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத அளவு சரிவடைந்துள்ளது. மக்களவைத் தேர்தலு முடிவுகளின் எதிரொலி பங்குச்சந்தை சரிவுடன் வந்த்தகமாகிவருகிறது.


5,000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்


மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 4,500 அல்லது 5.53 % புள்ளிகள் சரிந்து 72,241.18 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 1,369 அல்லது 5.81% புள்ளிகள் சரிந்து 21,918.30 ஆக வர்த்தகமாகி வருகிறது.


மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் முடிவுகள் சற்றே நிச்சயத்தன்மை இல்லாமல் இருக்கிறது. பங்குச்சந்தை தொடக்கத்திலேயெ கடும் சரிவை பதிவு செய்தது. காலை 9.30 மணி நிலவரப்படி, மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,715.78 புள்ளிகள் குறைந்து, 74,2753 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி  539.1 புள்ளிகள் குறைந்து 22, 724.80 புள்ளிகளில் தொடக்கத்தில் வர்த்தகமானது. மதியானத்திற்கு சென்செக்ஸ் 5000 புள்ளிகளை வரை சரிந்த்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். 


சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் 6 % வரை சரிவை சந்தித்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக இருந்த நிலையில், நேற்றைய வர்த்தகத்தில் 2000 புள்ளிகள் உயர்ந்திருந்தது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் இன்றைக்கும் தெரிய வரும் நிலையில், பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இருந்தாலும், I.N.D.I.A. கூட்டணி மகாராஷ்டிராவில் 23 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 27 தொகுதிகளிலும், தமிழ்நாட்டில் 36 தொகுதிகளிலும், கேரளாவில் 17 தொகுதிகளிலும், பஞ்சாபில் 9 தொகுதிகளிலும், ஹரியானாவில் 7 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. I.N.D.I.A. கூட்டணி முன்னிலையில் உள்ளது. 


ரூ.26 லட்சம் கோடி இழப்பு!


பா.ஜ.க.-வின் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் I.N.D.I.A. கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருவதால் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை செவ்வாய்க்கிழமை சந்தித்துள்ளது.


இதனால் முதலீட்டாளர்கள் சராசைர்யாக ரூ.36.6 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளனர். 


திங்கள்கிழமி சந்தை முடிவில் திங்கள்கிழமை சந்தை முடிவில் ரூ,426 லட்சம் கோடியாக இருந்த BSE நிறுவனங்களின் மூலதனம் செவ்வாய்க்கிழமை 11 மணியளவில் ரூ.400 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.


11 மணியளவில் சென்செக்ஸ் 3,690 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.  அடுத்து சென்செக்ஸ் 5,800 புள்ளிகள் சரிவடைந்தது. நிஃப்டி 21,927.90 ஆக வர்த்தகம் ஆகி வருகிறது.


லாபத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்..


HUL,பிரிட்டானியா, ஹீரோ மோட்டர்கார்ப், நெஸ்லெ, டாடா கான்ஸ் ப்ராட், டிவிஸ் லெப்ஸ், டி.சி.எஸ்.சிப்ளா, அல்.டி.ஐ. மைண்ட்ரீ  ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின. 


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..


அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், ஓ.என்.ஜி.சி., எஸ்.பி.ஐ., என்.டி.பி.சி., கோல் இந்தியா, லார்சன், பி.பி.சி.எல்., என்.டி.பி.சி., ஸ்ரீராம் ஃபினான்ஸ், பவர்கிரிட் கார்ப்,டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், இந்தஸ்லேண்ட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஹிண்டால்கோ,பஜாஜ் ஃபின்சர்வ் ரிலையன்ஸ், ஜெ.எஸ்.டபுள்யூ. ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, கோடாக் மகேந்திராம, ஈச்சர் மோட்டர்ஸ், டாடா மோட்டர்ஸ், க்ரேசியம், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ, டைட்டன் கம்பெனி,விப்ரோ, அப்பல்லோ மருத்துவமனை, ஏசியன் பெயிண்ட்ஸ், டி.சி.எஸ்,. ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.


கடந்த 2020 மார்ச் மாதம் இந்திய பங்குச்சந்தை இந்த அளவிற்கு சரிவை சந்தித்தது. அதன் பிறகு, வரலாற்றில் சென்செக்ஸ் 5000 புள்ளிகள் வரை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. நிஃப்டி 21 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை சரிவிலிருந்து மீளுமா என்பது தேர்தல் முடிவை பொறுத்து அமையும்.