இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது. HMPV வைரஸ் தொற்று பாதிப்பு இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,258.12 அல்லது 1.59% புள்ளிகள் சரிந்து 77,964 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 388.70 அல்லது 1.62% புள்ளிகள் சரிந்து 23,616.05 ஆகவும் வர்த்தகமாகியது. 


லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:


அப்பல்லோ மருத்துவமனை, டாடா கான்ஸ் பராட், டைட்டன் கம்பெனி, ஹெச்.சி.எல். டெக் ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது. 


டாடா ஸ்டீல், ட்ரெண்ட், பி.பி.சி.எல்., கோல் இந்தியா, என்.டி.பி.சி., அதானி எண்டர்பிரைசிஸ், பாரத் எலக்ட்ரானிக், கோடாக் மஹிந்திரா, பவர்கிரிட் கார்ப், ஹிண்டாலோ, இந்தஸ்லேண்ட் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், எம்&எம், ரிலையன்ஸ், ஸ்ரீராம் ஃபினான்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, நெஸ்லே, எஸ்.பி.ஐ., ஆக்சிஸ் வங்கி, க்ரேசியம், டாடா மோட்டர்ஸ், ஓ.என்.ஜி.சி. பஜாஜ் ஆட்டோ, லார்சன், மாருதி சுசூகி, சிப்ளா, ஹெச்.யு.எல்., ஈச்சர் மோட்டர்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹீரோ மோட்ட்டோகாப், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, பிரிட்டானியா, பஜாஜ் ஃபினான்ஸ், பாரதி ஏர்டெல், டெக் மஹிந்திரா, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், சன் ஃபார்மா, டி.சி.எஸ்., ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, விப்ரோ, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.



இந்திய பங்குச்சந்தை சரிவு - காரணம் என்ன?



  • இன்றைய வர்த்தக நேரத்தில் 324 பங்குகள் கடும் சரிவை சந்தித்தது. இந்தியாவில் இரண்டு பேருக்கு’ human metapneumovirus (HMPV)’ வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அது பங்குச்சந்தை முதலீட்டாளர்களை கவனமுடன் செயல்பட தூண்டியுள்ளது. 

  • அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்வது வருவதும் பங்குச்சந்தை சரிவிற்கு காரணமாக சொல்லப்படுகிறது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார அசாதாரணமின்மை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  • 2024, அக்டோபர் மாதத்தைவிட கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது ஆகிய சில காரண்ங்களால் பங்குச்சந்தை 1.4% சரிவடைந்துள்ளது. 

  • ஆசிய பங்குச்சந்தை பெரும்பாலானவை சரிவுடன் வர்த்தகமாகியது. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனால்டு டிரம் சீனா உள்பட மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான விலை உயர்வு இருக்கும் என்று அறிவித்துள்ளது, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, கோடாக் மஹிந்திரா வங்கி, ஐ.டி.சி., டாடா மோட்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடுமையான வீழ்ச்சி, அமெரிக்க டாலர் மதிபு உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தமாக காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.