அஜித் குமார்


அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்து பின் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கல் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். இன்னொரு பக்கம் நடித்ததுடன் தனது வேலை முடிந்தது என அஜித் சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாட குடும்பத்துடன் சென்றார்.


ரேஸிற்கு புறப்பட்ட அஜித் 


புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த கையோடு அஜித் தனது அடுத்தகட்ட திட்டங்களை நோக்கி நகர்ந்துள்ளார். அதன்படி 2025 இல் ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க அஜித் குமார் ரேஸிங் குழு பங்கேற்க இருக்கிறது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் கலந்துகொள்வதற்கு முன்பாக  2025 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற இருக்கும் மிஷலின் 24H ரேஸில் அஜித் தலைமையில் அவரது அணி கலந்துகொள்ள இருக்கிறது.


துபாயில் நடைபெற இருக்கும் மிஷலின் 24H பந்தையத்தில் அஜித் குமார் Porsche 992 GT3 Cup காரை பயண்படுத்த இருக்கிறார். Porsche  ரேஸிங் சீரிஸின் உயர்ரக கார்களில் ஒன்று இது. அஜித் குமார் என்கிற முத்திரை பெயர் பதிக்கப்பட்டு நெருப்பு போல் பந்தையத்திற்கு தயாராகி நிற்கும் இந்த காரின் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. 






அஜித்தை வழியனுப்பிய குடும்பத்தினர்


சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து அஜித் ஷாலினி மற்றும் அஜித்தின் இரு குழந்தைகள் சென்னை திரும்பினார்கள் . சென்னை விமான நிலையத்தில் தனது குடும்பத்தை வழியனுப்பி அஜித் துபாய் புறப்பட்டார். தனது மனைவி ஷாலினியை கட்டிப்பிடித்த அஜித் தனது மகனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வழியனுப்பினார். பின் துபாய் கிளம்பி சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது