பங்குச் சந்தைகள் வீழ்ச்சி:


இன்று பங்குச் சந்தைகளானது காலையில் தொடங்கியது முதலே சரிவிலே தொடங்கியுது. பின்னர் முடிவடைந்த போதும் சரிவுடனே முடிவடைந்ததால் முதலீட்டாளர்கள் கவலையடைந்தனர். மேலும் முதல் 5 நிமிடத்தில் 2.5 லட்சம் கோடி வரை முதலீட்டாளர்கள் இழந்தனர்.


சென்செக்ஸ்:


மும்பை பங்குச் சந்தை குறியீட்டான சென்செக்ஸ் நேற்று 55,320.28 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று மேலும் 1,016.84 புள்ளிகள் மேலும் குறைந்து 54, 303.44 புள்ளிகள் என்ற நிலையில் உள்ளது.


 நிஃப்டி:


தேசிய பங்குச் சந்தை குறியீட்டான நிஃப்டி நேற்று 16,478.10 என்ற நிலையில் நிறைவடைந்தது. இன்று மேலும் 276.30 புள்ளிகள் குறைந்து 16,201.80 புள்ளிகள் என்ற நிலையில் உள்ளது.






 பங்கு சந்தைகள் வீழ்ச்சிக்கான காரணம்:


*அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், பெடரல் வாங்கியானது பணக்கொள்கையை கடுமையாக்க வாய்ப்புள்ளதால், முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வருகின்றன.


* அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது ஒரு காரணமாகும்






*கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதன் காரணமாகவும் சர்வேதச முதலீட்டாளர்கள், முதலீடுகளிலிருந்து வெளியேறி வருகின்றன.


நிபுணர்கள் கருத்து:


பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்தது தொடர்பாக நிபுணர்கள் கூறுகையில், இந்த தருணத்தில் எந்தவொரு முடிவையும் டிரெடேர்கள் கவனத்துடன் எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.


Also Read: Manoj Modi: பிரதமர் நரேந்திர மோடியை தெரியும்; அம்பானியின் வலது கரம் மனோஜ் மோடியை தெரியுமா?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண