இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகியது. காலை 10:30  மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 2,228.73 அல்லது 2.75% புள்ளிகள் சரிந்து 78,753.23 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 676.30 அல்லது 2.74% புள்ளிகள் சரிந்து 24,041.40 ஆக வர்த்தகமாகியது. 


இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி


இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு உலக அளவில் சந்தைகளில் நிலவும் அசாதாரண சூழல் காரணம் என்று குறிப்பிட்டாலும் மத்திய பட்ஜெட்டில் பெரிதாக எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என்பதும் ஒன்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் பொருளாதார அசாதாரண நிலை, அந்நாட்டின் ஜி.டி.பி. சரிவு அகியவை சர்வதேச சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பங்குச்சந்தை 6% சரிவு, சரிவடைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது. 


அமெரிக்க பொருளாதார நிலை:


அமெரிக்க பொருளாதாரத்தில் மந்தமான நிலை தொடர்கிறது. அதோடு, வேலையின்மை ரேட் 4.3 சதவீதம் கடந்த மாதம் உயர்ந்துள்ளது. இது ஜூன் மாதத்தில் 4.1% ஆக இருந்தது. ஜூலை மாதத்தோடு தொடர்ந்து நான்காவது மாதமாக வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ளது அந்நாட்டு பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை நிலை மோசமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.


ப்ளூம்பர்க் அறிக்கையின்படி, கோல்மேம் சாச்ஸ் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் அமெரிக்காவில் பொருளாதார பின்னடைவு அடுத்த 12 மாதங்களில் 15 சதவிகிதத்தில் இருந்து 25 ஆக உயரும் என்று கணித்துள்ளார். 


மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல்:


பல்வேறு செய்தி ஊடக தகவலின்படி, இரான் இஸ்ரேல் செயலுக்கு பழி தீர்க்கும் விதமாக தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கிறது.  இஸ்ரேஸ் ஏராளமான மக்களை கொன்று குவித்துள்ளது. ஈரான் பகுதியில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் இரு நாடுகளும் அடுத்த தாக்குதலுக்கு தயாராகி வருவதாக தெரிகிறது. இருப்பினும் ஈரான் இது தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்திய பங்குச்சந்தை கடும் சரிவு - வரலாற்றில் டாப் 5 சரிவு:


ஜூன்,4 2024:


2024 ஆண்டில் ஜூன் மாதத்தில் ஒரே நாளில் சென்செக்ஸ் 6,051.35 அலல்து 7.93% புள்ளிகள் சரிந்து வர்த்தகமானது. அன்றைய வர்த்தக நேரத்தில் 76,285.78 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கிய சென்செக்ஸ் 70 ஆயிரமாக குறைந்தது. 


மார்ச்,23,2020:


கொரோனா பெருந்தொற்று காலத்தில் மார்ச் 23-ம் தேதி வர்த்தகத்தில் சென்செக்ஸ் 27,608.80 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கிய நிலையில் 1,727.97 புள்ளிகள் அல்லது 6.23% புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமானது. 


மார்ச்,16.2020:


கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக சென்செக்ஸ் 33 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 31.276.30 ஆக வர்த்தகமானது. 1,826.94 புள்ளிகள் சரிந்தது. 


மார்ச்,13,2020:


மார்ச் 13ம் தேதி உலக சந்தைகளில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக பங்குச்சந்தை 1,825.16 புள்ளிகள் அல்லது 5.84% புள்ளிகள் சரிந்தது.