இந்திய பங்குச் சந்தையானது இன்றைய நாளில் ஏற்றமும் இறக்கமும் இருந்து வந்த நிலையில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
பங்குச்சந்தை நிலவரம்:
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ்-50, 149.98 புள்ளிகள் உயர்ந்து 76, 606.57 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 58.10 புள்ளிகள் உயர்ந்து 23, 322.95 புள்ளிகளில் வர்த்தகமானது.
லாபம் - நஷ்டம்:
கோல் இந்தியா, பவர் கிரிட், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், எல்டிஐ மிண்ட்ட்ரீ மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகியவற்றின் பங்குகள் நிஃப்டியில் லாபத்தில் வர்த்தகமானது. இந்நிலையில், பிரிட்டானியா, எச்யுஎல், எம்&எம், டைட்டன் கம்பெனி மற்றும் இன்ஃபோசிஸ், டிசிஎஸ் ஆகியவற்றின் பங்குகள் நஷ்டமடைந்தன.
துறைகளை பொறுத்தவரை மூலதன பொருட்கள், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் ஆற்றல் தலா 1 சதவீதம் வரை ஏற்றத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 1 சதவீதம் வரை அதிகரித்தது.
தேக்கத்தில் பங்குச் சந்தை:
பங்குச் சந்தையானது, நேற்று மற்றும் இன்றைய நாட்களை பொறுத்தவரை பெரிதும் ஏற்றமும் சரிவும் இல்லாமல் தேக்க நிலையில் காணப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் முடிவில் எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுக்கவில்லை. இதனால், கூட்டணி ஆட்சியை, பாஜக அமைத்துள்ளது. இதனால், தனிப்பெரும்பான்மை கட்சி ஆட்சியமைக்கும் சூழல் இல்லாத நிலை, இந்த முறை ஏற்பட்டுள்ளது. இதனால் நிர்வாகங்களில் , கொள்கைகளில் உறுதித்தன்மை குறைவுத் தன்மை ஏற்படும் என வர்த்தகர்கள் நினைக்க வாய்ப்புகள் அதிகம். இதனால், வரும் காலங்களில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது,
தேர்வு முடிவு நாளுக்கு முன் ஏற்றத்திற்கு சென்ற இந்திய பங்குச் சந்தை, முடிவு நாளில் சரிவை சந்தித்தது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் பங்குச்சந்தையின் போக்கு, ஏற்றத்துடன் காணப்பட்டாலும், கடந்த 2 நாட்களாக பெரிதாக ஏற்றமும் இறக்கமும் இன்றி சென்செக்ஸ் 30, நிஃப்டி 50 பங்குகள் வர்த்தகமானது
இந்நிலையில் வரும் நாட்களில் அரசு போக்கின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வரும் நாட்களில் ஏற்றத்துடன் இருக்குமா அல்லது இறக்கத்துடன் இருக்குமா என்ற நிலையற்ற தன்மை நிலவுகிறது.
Also Read: Latest Gold Silver Rate:மீண்டும் உயர்ந்த தங்கம் விலை;எவ்வளவு தெரியுமா?