Share Market Update Today: மக்களவைத் தேர்தல் முடிவுக்கு முன்பு ஏற்றத்துக்குச் சென்ற இந்திய பங்குச் சந்தை தேர்தல் முடிவு நாளில் பெரும் சரிவைச் சந்தித்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்கள் மீண்டு எழுந்து ஏற்றம் காண ஆரம்பித்தது. இந்நிலையில் , மீண்டும் இன்று இந்திய பங்குச் சந்தை சரிவுடன் முடிந்ததால் இந்திய பங்குச் சந்தையின் போக்கானது நிலையற்றதாக இருந்து வருகிறது.
பங்குச்சந்தை நிலவரம்:
இந்நிலையில், இன்றைய நாளின் முடிவில் இந்திய பங்குச் சந்தையானது, நிலையற்றத் தன்மையிலான போக்குடன் இருந்ததை பார்க்க முடிந்தது.
இன்றைய நாள் முடிவில், சென்செக்ஸ் 33.49 புள்ளிகள் அல்லது 0.04 சதவீதம் சரிந்து 76,456.59 புள்ளிகளாகவும், நிஃப்டி 5.60 புள்ளிகள் அல்லது 0.02 சதவீதம் உயர்ந்து 23,264.80 புள்ளிகளாகவும் வர்த்தக நேர முடிவில் இருந்தது.
ஏற்றம் – இறக்கம் கண்ட பங்குகள்:
இன்றைய நாளில் சுமார் 2,246 பங்குகள் ஏற்றம் கண்டன, 1,193 பங்குகள் சரிவைக் கண்டன, 70 பங்குகள் மாற்றமின்றி இருந்தன.
ஓஎன்ஜிசி, எல்&டி, அதானி போர்ட்ஸ், மாருதி சுசுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டியுள்ளன, அதே நேரத்தில் கோடக் மஹிந்திரா வங்கி, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டிவிஸ் லேப்ஸ் ஆகியவை நஷ்டமடைந்தன.
துறைகளை பொறுத்துவரை, வங்கி, எஃப்எம்சிஜி, ஹெல்த்கேர் உள்ளிட்டவை விற்பனையில் இருந்ததை பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் மூலதன பொருட்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் ரியல் எஸ்டேட் தலா 1 சதவீதம் உயர்ந்துள்ளது.
தொடரும் நிலையற்றத் தன்மை:
பாஜக கட்சியானது தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுக்கவில்லை. இதனால், கூட்டணி கட்சியுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனால், தனிப்பெரும்பான்மை கட்சி ஆட்சியமைக்கும் சூழல் இல்லாத நிலை, இந்த முறை ஏற்பட்டுள்ளது. இதனால் நிர்வாகங்களில் , கொள்கைகளில் உறுதித்தன்மை குறைவுத் தன்மை ஏற்படும் என வர்த்தகர்கள் நினைக்க வாய்ப்புகள அதிகம். இதனால், வரும் காலங்களில் நிச்சயமற்றத்தன்மை நிலவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது,
தேர்வு முடிவு நாளுக்கு முன் ஏற்றத்திற்கு சென்ற இந்திய பங்குச் சந்தை, முடிவு நாளில் சரிவை சந்தித்தது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் பங்குச்சந்தையின் போக்கு, ஏற்றத்துடன் காணப்பட்டாலும், இன்றைய நாளில் சென்செக்ஸ் சரிவை சந்தித்தது.
இந்நிலையில் வரும் நாட்களில் அரசு போக்கின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வரும் நாட்களில் ஏற்றத்துடன் இருக்குமா அல்லது இறக்கத்துடன் இருக்குமா என்பது கணிப்பது கடினம்தான்.