மே மாதத்தின் இறுதி வியாழக்கிழமையில், இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 617.30 அல்லது 0. 83% புள்ளிகள் சரிந்து 73,885.60 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 216.05 அல்லது 0.95% புள்ளிகள் சரிந்து 22,488.65 ஆக வர்த்தகமாகியது.


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், அமெரிக்க பFederal Funds Rate, OPEC கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவால் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல காரணங்களால் பங்குச்சந்தை தொடர்ந்து ஐந்தாவது செசனாக கடும் சரிவை சந்தித்துள்ளது. 


வங்கி துறை தவிர மற்ற நிறுவனங்கள் கடும் சரிவுடன் வர்த்தகமாகின. 


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..


ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, வங்கி, எஸ்.பி.ஐ. வங்கி, கோடாக் மஹிந்திரா வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின. 


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..


டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, பவர்கிரிட் கார்ப், டைட்டன் கம்பெனி, விப்ரோ, ஸ்ரீராம் ஃபினான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்லே, பஜாஜ் ஃபினான்ஸ், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, க்ரேசியம், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், டாடா மோட்டர்ஸ், ஓ.என்.ஜி.சி., அதானி போர்ட்ஸ்,சிப்ளா, டி.சி.எஸ்., ஐ.டி.சி., இன்ஃபோசிஸ், எம் & எம், ஹெச்.சி.எல்., அல்ட்ராசெக் சிமெண்ட், மாருதி சுசூகி, சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, டிவிஸ் லேப்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப், ஈச்சர் மோட்டர்ஸ, ஹீரோ மோட்டர்கார்ப் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.


சர்வதேச சந்தையில் நிலவி வரும் சூழல், உலகளாவிய பணவீக்கம் ஆகியவற்றினால் சர்வேத்ச அளவில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அது இந்திய பங்குச்சந்தயிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பங்குச்சந்தை சரிவு முதலீட்டாளர்களிடையே மன சோர்வை ஏற்படுத்தியது.  கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 1000 புள்ளிகள் அதிகரித்திருந்த சென்செக்ஸ் தொடர்ந்து சரிந்து வருகிறது. நாளைய வர்த்தகத்தில் ஏற்றம் காணுமா என்று முதலீட்டாளர்கள் ஆவலுடன் உள்ளனர். 


இந்திய ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.31 ஆக உள்ளது. இது புதன்கிழமை பங்குச்சந்தை வர்த்த நேர முடிவில் 83.34 ஆக இருந்தது. 




மேலும் வாசிக்க..


Adani Paytm Deal: பேடிஎம் பங்குகளுக்கு ஸ்கெட்ச் போட்டாரா அதானி? வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!