இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
வர்த்தக நேர தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 159.52 அல்லது 0.20% புள்ளிகள் உயர்ந்து 81,066.24 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 51.70% அல்லது 0.19% புள்ளிகள் உயர்ந்து 24,818.30 ஆக வர்த்தகமாகியது.
வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 147.89 அல்லது 0.18% புள்ளிகள் உயர்ந்து 81,053.19 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 41.30 அல்லது 0.17% புள்ளிகள் உயர்ந்து 24,811.50 ஆக வர்த்தகமாகியது.
இந்திய ரூபாய் மதிப்பு:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 83.95 ஆக இருந்தது.முதலீட்டாளர்களுக்கான தேவை அதிகமாக இருந்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு இன்று குறைந்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததும் இதற்கு காரணமாக இருந்தது.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:
க்ரேசியம், டாடா கான்ஸ் ப்ராட், பாரதி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் கம்பெனி, எல்,டி.ஐ. மைண்ட் ட்ரீ, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இன்ந்போசிஸ், டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டர்கார்ப், எஸ்.பி.ஐ., எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, அல்ட்ராடெக் சிமெண்ட், அப்பல்லோ மருத்துவமனை, ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், அதானி எண்டர்பிரைசிஸ், பஜாஜ் ஆட்டோ, ஈச்சர் மோட்டர்ஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், ஹெட்.சி.எல்.,லார்சன், இந்தஸ்லேண்ட் வங்கி, ஜெ.எஸ்.டபுள்யு. ஸ்டீல், ஐ.டி.சி., ஆக்சிஸ் வங்கி, பிரிட்டானியா, மாருதி சுசூகி, பஜாஜ் ஃபினான்ஸ், லார்சன், டிவிஸ் லேப்ஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டும் லாபத்துடன் வர்த்தகமாகின.
டாடா மோட்டர்ஸ், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், என்.டி.பி.சி., சிப்ளா, பவர்கிரிட் கார்ப், கோல் இந்தியா, டிவிஸ் லேப்ஸ், ஹிண்டால்கோ, ஓ.என்.ஜி.சி., எம்&எம், டி.சி.எஸ்., கோடாக் மஹிந்திரா, ரிலையன்ஸ், சன் ஃபார்மா, விப்ரோ, அதானி போர்ட்ஸ், ஹிண்டால்கோ, நெஸ்லே, ஹெச்.சி.எல். ஹெக். ஐ.டிசி., ஆக்சிஸ் வங்ஜி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.