இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. இன்றைய வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 418.72 அல்லது 0.72% புள்ளிகள் உயர்ந்து 58408.02 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல, தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டி 123.70 அல்லது 0.71% புள்ளிகள் உயர்ந்து 17439.20 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தகத்தில், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி, வாகனம் உள்ளிட்ட துறைகளின் நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன. இந்திய பங்கு சந்தையின் இந்த புதிய உச்சத்தால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்க பெடரல் வங்கி தலைவர் ஜெரோம் அளித்த பேட்டியில் "ஃபெடரல் வங்கி தேவைப்பட்டால் அடுத்தடுத்து வட்டி வீதத்தை உயர்த்தி பணவீ்க்கத்தை கட்டுப்படுத்தும்” எனத் தெரிவித்துளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலவரப்படி, ரிலையன்ஸ், ஹெட்.சி.எல்., பஜார்ஜ் ஃபினான்ஸ், டாகடர். ரெட்டி லேப்ஸ் மற்றும் ஐ.டி.சி, பாரத் ஸ்டேட் வங்கி, டைட்டன், இந்தஸ்லேண்ட் வங்கி, ஹிண்டாங்கோ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகின்றன.
நிப்டியை பொறுத்தவரை, ஹின்டால்கோ, ஐஓசி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்.டி.எப்.சி. வங்கி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் செல்கின்றன. ஏர்டெல், பிரிட்டானியா, கோல் இந்தியா, சிப்லா, ஹீரோமோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் என்டிபிசி மற்றும் ஏர்டெல் பங்குகள் மட்டுமே சரிவடைந்துள்ளன. மற்ற 28 பங்குகளும் லாபத்தில் வர்த்தகமாகிறது.
உலகப் பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப்பட்ட நிலையில், புதன்கிழமை தொடக்க ஒப்பந்தங்களில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் அதிக அளவில் வர்த்தகம் செய்யப்பட்டன. ஆசிய பங்குச்சந்தைகள் மூன்று வார உயர்வை எட்டியுள்ளது. அதே நேரத்தில் நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் மோதல் எண்ணெய் மற்றும் பொருட்களின் விலைகளை உயர்வாக வைத்திருந்தது. ஒரே இரவில், S&P 500 1.1 சதவீதம் உயர்ந்தது மற்றும் நாஸ்டாக் கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்தது.
Nayanthara: வாடகைத்தாய் மூலம் குழந்தை.. நயன்தாராவை சுற்றும் அடுத்த புயல்.!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்