இந்திய பங்குச் சந்தை இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1005 அல்லது 1.45% புள்ளிகள் சரிந்து 53,297.24 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல, தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டி 310.05 அல்லது 1.54% புள்ளிகள் குறைந்து 15,916.80 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தகத்தில், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி, வாகனம் உள்ளிட்ட துறைகளின் நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன.
இன்றைய வர்த்தக நிலவரப்படி, சென்செக்ஸ் மஹிந்திரா & மஹிந்திரா, பஜார்ஜ் ஃபினான்ஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், சன் ஃபார்மா, ஹெச்.டி.எஃப்.சி. ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகின்றன.
ஆசிய பங்குச் சந்தையில் பெரும்பாலான பங்குகள் சிகப்பில் அதாவது சரிவில்தான் வர்த்தகமாகி வருகிறது. ஜப்பான் பங்குச் சந்தை 0.92 அளவு சரிந்தது.
லார்சன் & டர்போ, டாடா மோட்டார்ஸ், சைமன்ஸ் , ஹனிவெல் ஆட்டோமேசன் இந்தியா, ட்யூப் இன்வெஸ்மெண்ட் ஆஃப் இந்தியா, ஆதித்யா பிர்லா கேப்பிடல், பூனாவாலா ஃபின்கார்ப், ஷீலா ஃபோம், குஜராத் ஸ்டேட் பெட்ரோனெட், கிரெடிக்ட் அசஸ் க்ராமீன், அப்பல்லோ டயர்ஸ், அனுபம் ரசாயான், ஆர்.பி.எல். வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் மார்ச் காலண்டிற்கான லாபம் நஷ்ட கணக்கு குறித்த அறிக்கையை வெளியிட இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்