Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.
இன்று காலை தொடங்கிய மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 173.62 புள்ளிகள் அதிகரித்து 61,3583.77 ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 56.70 புள்ளிகள் அதிகரித்து 18,259.50 புள்ளிகளாக உள்ளது.
லாபம்-நஷ்டம்
பிஐ இண்டஸ்ட்ரீஸ், கோல் இந்தியா, பிர்லா சாப்ட், மதர் சன், டிவிஎஸ் மோட்டார், அதானி போர்ட்ஸ், பிரிட்டானியா, சிப்லா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
எம்ஆர்எப், டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், டைட்டன் கம்பெனி, டிசிஎஸ், ஐசிஐசி வங்கி, என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
பொதுத்துறை வங்கிகள், கார் மற்றும் உலோகப் பங்குகளை வாங்குவது அதிகரித்ததன் காரணமாக, மருந்து நிறுவனங்களில் ஏற்பட்ட இழப்புகள் ஈடுசெய்யப்பட்டன. முக்கிய துறை நிறுவனங்கள் ஏற்றத்துடன் முடிவடைந்ததன் காரணமாக பொதுத்துறை வங்கிகள் முன்னிலை வகித்தன.
பணவீக்கம்:
உலகளவில் பணவீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதாக, அமெரிக்க மத்திய வங்கி, சில தினங்களுக்கு முன்பு முடிவு எடுத்தது. இதையடுத்து 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 4 சதவீதமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்திய பங்குச் சந்தை கடந்த வாரத்தில் சரிவை கண்டன.
கச்சா எண்ணெய் மீது தாக்கம்
மேலும், சீனாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கச்சா எண்ணெய் தேவையானது உலகளவில் குறைய வாய்ப்புள்ளதால், கச்சா எண்ணெய்யின் விலை குறையும் சூழல் உள்ளது. இருப்பினும், கடந்த சில தினங்களாக வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் செல்லும் தன்மை காணப்பட்டுள்ளது.
ரூபாய் மதிப்பு நிலவரம்:
இதனால் டாலர் வரவு அதிகரித்துள்ளது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வலுவடையும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 49 காசுகள் அதிகரித்து 81.43 ஆக உள்ளது.