Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தில் தொடங்கியுள்ளன.


இன்று காலை தொடங்கிய மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 179.28 புள்ளிகள் அதிகரித்து 61,929.88 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 50.7 புள்ளிகள் அதிகரித்து 18,394.60 புள்ளிகளாக உள்ளது.






லாபம்-நஷ்டம்


 ஏஷியன் பெயிண்ட்ஸ் , ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மகேந்திரா, டாடா கான்ஸ், லார்சன், டிசிஎஸ், விப்ரோ, எஸ்பிஐ, ஐடிசி, டாட்டா மோட்டார்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், எச்சிஎல் டெக், யுபிஎல், சிப்ளா, டெக் மகேந்திரா, என்டிசி உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


அப்போலா மருத்துவமனை, பிரிட்டானியா, பாரதி ஏர்டெல், ஹிரோ மோட்டோகார்ப், நெஸ்டல், டெட்டன் கம்பெணி, மாருதி சுசிகி, கோல் இந்தியா, எச்டிஎஃபிசி பங்க், ஐசிஐசி பங்க், சன் பார்மா, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


பணவீக்கம்


அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்த  போதிலும் வட்டி விகிதம் பெரிதாக உயராது என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது. இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில்  பணவீக்கம் குறைந்து 6.77% ஆக சரிந்துள்ளது.


மீண்டும் சூடுபிடிக்கும் போர்


உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அண்டை நாடான போலந்து நாட்டில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. நோட்டா நாடுகளில் உறுப்பினராக இருக்கும் போலந்து மீது ரஷ்யாவின் தீடீர் ஏவுகணை தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


உக்ரைன் மீது ரஷ்யா இடையிலானா போர்  மீண்டும் சூடுபிடிக்குமா என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது. இதனால் ஆசிய பங்குச்சந்தை பாதிக்கும் சூழல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வட்டி விகிதம் உயருமா?


அமெரிக்காவில் பணவீக்கம்  எதிர்பார்த்த அளவுக்கு கடந்த மாதம் அக்டோபரில் உயரவில்லை. இதனால் பெடரல் வங்கி வட்டி விகிதத்தையும் பெரிதாக உயர்தாது என்ற எண்ணம் முதலீட்டாளர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும் வட்டிவீதம் உயர்த்தப்படும் என்பதில் மாற்றமில்லை என கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் அடுத்த கூட்டம் டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. கூட்டத்தின் கடைசி நாளில் (டிசம்பர் 7) அன்று வட்டி விகிதம் குறித்து முடிவு அறிவிக்கப்படும்.


மேலும் சீனாவில் கொரோனா தாக்கம் முழுமையாக முடியவில்லை. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது என கூறப்படுகிறது. இதனால் இன்று காலை வார்த்தைகம் சரிவில் காணப்பட்டது.


ரூபாயின் நிலவரம்






இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்கு டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 10 காசுகள் அதிகரித்து 81.54 ரூபாயாக ஆக உள்ளது.