Share Market : இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.
வர்த்தக நேர முடிவில் மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 261.11 புள்ளிகள் அதிகரித்து 61,888.09 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 76. 75 புள்ளிகள் அதிகரித்து 18,406.30 புள்ளிகளாக உள்ளது. இன்றைய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.
லாபம்-நஷ்டம்
பவர் கிரிட், அப்போலா டயர்ஸ், ஓ.என்.ஜி.சி, இந்தியாமார்ட் இன்டர், ஹிரோ மோட்டாகார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐசிஐசி, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, எம்&எம், அதானி போர்ஸ், என்டிபிசி, எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், பிரிட்டானியா, மாருதி சுசுகி, பாரதி ஏர்டெல், எம்&எம். டைட்டன் கம்பேனி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
கோல் இந்தியா, இன்ஃபோ ஏஜ், ஜிஎம்ஆர் ஏர்போர்ஸ், என்எம்டிசி, ஐஆர்சிடிசி, சன் பார்மா, டிசிஎஸ், ஐடிசி, எச்டிஎஃப்சி லைஃப், டெக் மகேந்திரா, சிப்ளா, எச்டிஎஃப்சி, எச்.சி.எல். டெக், ரிலையன்ஸ், ஆக்சிஸ் பங்க், கோடக் மகேந்திரா, நெஸ்லே, டாட்டா ஸ்டீல், லார்சன், ஈச்சர் மோட்டார்ஸ், யூ.பி.எல். உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
ரூபாயின் மதிப்பு:
இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 12 காசுகள் அதிகரித்து 81.16 ரூபாயாக உள்ளது