இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமானது. சென்செக்ஸ், நிஃப்டி பங்குச்சந்தை வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 259 அல்லது 0.39% புள்ளிகள் உயர்ந்து 84,803 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 110 அல்லது 0.43% புள்ளிகள் உயர்ந்து 25,911 ஆக வர்த்தகமாகியது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்பட்டது.
கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தை புதிய உச்சத்தை பதிவு செய்தது. இன்றும் சென்செக்ஸ், நிஃப்டி புதிய சாதனையை எட்டியிள்ளது. சென்செக்ஸ் 84 ஆயிரத்து 700 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 85 புள்ளிகளை கடக்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
முன்னணி 20 பங்குகளில் எஸ்.பி.ஐ., எம்&எம், ஏர்டெல், அல்ட்ராசெம்கோ, என்.டி.பி.சி. கோடாக் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடனும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.சி.எல். டெல், இன்ஃபோசிஸ், டெக் எம், இந்தஸ்லேண்ட் வங்கி, ஏசியண் பெயிண்ட்ஸ் உள்ளிட்டவை சரிவில் உள்ளது.
பி.எஸ்.இ. ஸ்மால்கேப் 0.58%, மிட்கேப் 0.16% உயர்ந்தன. ஃபார்மா துறை 1.02 சதவீதமும் நிஃப்டி ஆட்டோ 0.87 சதவீதமும் நிஃப்டி ரியாலிட்டி 0.85 சதவீதமும் உயர்ந்துள்ளது.
ஆசிய பங்குச்சந்தைகளை பொறுத்தவரை சியோல், ஷாங்காய், ஹாங்காங் உள்ளிட்ட பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. ஜப்பான் பங்குச்சந்தை உள்ளூர் விடுமுறை என்பதால் இன்று செயல்படவில்லை. கச்சா எண்னெய் விலை 0.75% உயர்ந்து பேரல் ஒன்றிற்கு 75.05 டாலர் உயர்ந்திருந்தது.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
ஓ.என்.ஜி.சி., எஸ்.பி.ஐ., எம்&எம், பி.பி.சி.எல்., பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எஃப்.சி., எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, பாரதி ஏர்டெல், கோல் இந்திடா, அல்ட்ராடெக் சிமெண்ட், கோடாக் மஹிந்திரா, அதானி எண்டர்பிரைசிஸ், அதானி போர்ட்ஸ், டாக்டர் ரெட்டி லேப்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, டாடா ஸ்டீல், டாடா கான்ஸ் ப்ராட், அப்பல்லோ மருத்துவமமை, நெஸ்லே, மாருதி சுசூகி, ரிலையன்ஸ், ஹெச்.யு.எல்., ஸ்ரீராம் ஃபினான்ஸ், என்.டி.பி.சி., க்ரேசியம், டைட்டன் கம்பெனி, பஜாக்ஜ் ஃபின்சர்வ், பவர்கிரிட் கார்ப், ஆக்ஸிஸ் வங்கி, சிப்ளா ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஈச்சர் மோட்டர்ஸ், ஹெச்.சி.எல். டெக். இந்தஸ்லேண்ட் வங்கி,. எல்.டி.ஐ. மைண்ட்ட்ரீ, லார்சன், இன்போசிஸ், விப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ், டி.சி.எஸ்., பஜாஜ் ஃபினாம்ஸ், ஹிண்டால்கோ,சன் பார்மா, பிரிட்டானியா, டாடா மோட்டர்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு அகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.