Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.


இன்று காலை தொடங்கிய மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 809.64 புள்ளிகள் அதிகரித்து 61,423.34  ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 239.70 புள்ளிகள் அதிகரித்து 18,267.90 புள்ளிகளாக உள்ளது.






வட்டி விகிதத்தில் மாற்றமா?


அமெரிக்க இடைத்தேர்தல் முடிவையொட்டி, அங்கு வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்கு சந்தையிலிருந்து அமெரிக்காவில் முதலீடு செய்யும் நிலவுவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய பங்கு சந்தை சரிவில் சென்றதாக கூறப்படுகிறது.


உலகளவில் பணவீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதாக, அமெரிக்க மத்திய வங்கி, கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவு எடுத்தது. இதையடுத்து 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 4 சதவீதமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


கச்சா எண்ணெய் மீது தாக்கம்


மேலும், சீனாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கச்சா எண்ணெய் தேவையானது உலகளவில் குறைய வாய்ப்புள்ளதால், கச்சா எண்ணெய்யின் விலை குறையும் சூழல் உள்ளது. 


ரூபாயின் மதிப்பு: