மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 113.95 புள்ளிகள் அதிகரித்து 60,950.36 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி-50, 64.45 புள்ளிகள் அதிகரித்து 18,117 புள்ளிகளாக உள்ளது.
பணவீக்கம்:
உலகளவில் பணவீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதாக, அமெரிக்க மத்திய வங்கி, சில தினங்களுக்கு முன்பு முடிவு எடுத்தது. இதையடுத்து 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 4 சதவீதமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதனால், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வால், இந்திய பங்கு சந்தை சரிவை கண்டது. இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக இந்திய பங்கு சந்தை சரிவை கண்டு வந்தது.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி நேற்று ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இச்சூழலில், கடந்த இரண்டு நாட்களுக்கு பிறகு, இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன.
லாபம்-நஷ்டம்:
அதானி போர்ட்ஸ், ஏசியண்ட் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபினான்ஸ், பிரிட்டானியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
கோல் இந்தியா, சிப்லா,பாரதி ஏர்டெல்,பஜாஜ் ஆட்டோ,அப்போலோ மருத்துவமனை உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
ரூபாய் மதிப்பு
தற்போது சீனாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கச்சா எண்ணெய் தேவையானது உலகளவில் குறைய வாய்ப்புள்ளதால், கச்சா எண்ணெய்யின் விலை குறையும் சூழல் உள்ளது. இதனால் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு, சற்று வலுவடையும் சூழல் ஏற்பட்டுள்ளது
இந்நிலயில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 45 காசுகள் அதிகரித்து, 82.43 ரூபாயாக உள்ளது.