வாரத்தின் முதல் வணிக நாளான இன்று இந்திய பங்குசந்தை மிகவும் இறக்கத்துடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியும் 17,000 புள்ளிகளுக்கு கீழ் குறைந்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா பிரச்னை காரணமாக கச்சா எண்ணெய் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவு விலை உயர்வு கண்டுள்ளது.






இன்று காலை சென்செக்ஸ் நிலவரப்படி, டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் மட்டும் ஏற்றம் கண்டிருந்தன. எஸ்பிஐ, இண்டஸ்லேண்ட், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, எல்&டி, எம்&அம், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபினான்ஸ், மாருதி மற்றும் சில நிறுவனங்களின் பங்குகள் இறக்கம் கண்டிருந்தன. இதற்கு முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை நாள் முடிவின் நிலவரப்படி சென்செக்ஸ் 773 புள்ளிகள் சரிந்து 58,153 ஆகவும், நிஃப்டி 231 புள்ளிகள் குறைந்து 17,375 ஆகவும் முடிவடைந்தன.




மேலும் படிக்க: Android 13 | ஆண்ட்ராய்ட் 13 வெர்ஷன் அறிமுகம்! - நீங்களும் யூஸ் பண்ணுங்க.. மாஸ் பண்ணுங்க.!




சென்னையில் இன்று தங்கம் வெள்ளி நிலவரம்:


சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் நேற்று ரூபாய் 4,715-க்கு விற்கப்பட்டது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூபாய் 37,720-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி தங்கம் ஒரு கிராமிற்கு 28 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூபாய் 4,687-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 224 ரூபாய் குறைந்து 37,496 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


அதேபோல், 24 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 5,053-க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 40,424-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி கிராம் ரூபாய் 68.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 68,200-க்கு விற்கப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண