மத்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய வட்டி விகிதம் தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிட உள்ளது. இந்நிலையில்  பங்குச்சந்தை இன்று மிகவும் இறக்கத்துடன் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகள் வரை குறைந்துள்ளது. தற்போது சென்செக்ஸ் 55,083 புள்ளிகளில் உள்ளது. அதேபோல் நிஃப்டி சுமார் 200 புள்ளிகள் வரை குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நிஃப்டி 16,397 புள்ளிகளில் உள்ளது. 


 


பங்குச் சந்தை இன்று இவ்வளவு இறங்க ஆட்டோ பிரிவு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட சில முக்கியமான பிரிவுகளில் ஏற்பட்ட சரிவு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எஸ்பிஐ, என்.டி.பி.சி, பவர் க்ரிட், இண்டஸ் இண்ட் வங்கி ஆகியவற்றின் பங்குகள் மட்டும் சற்று ஏற்றம் கண்டுள்ளது. ஹெச்.டிஎஃப்சி மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவற்றின் பங்குகள் மிகவும் கடினமாக வீழ்ந்துள்ளது. எல்.ஐசி நிறுவனத்தின் பங்குகளும் சற்று குறைவாக பங்குச் சந்தையில் இன்று தொடங்கியுள்ளது.


 






அதேபோல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.72ஆக உள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் தொடர்பான தரவுகள் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இதன்காரணமாக இந்திய பங்குச்சந்தையில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 


 


மேலும் நாளை மத்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய குறுகிய கால வட்டி விகிதமான ரெப்போ ரேட் தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளது. இதனால் பங்குச்சந்தையில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று கருதப்படுகிறது. எனினும் ஒரு சிலர் வல்லுநர்கள் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தைவிட அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் பங்குச்சந்தையில் முக்கியமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். மேலும் இதன்காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. 




மேலும் படிக்க:LIC: எல்.ஐ.சி. சந்தை மதிப்பு வராலாறு காணாத அளவு சரிந்தது! முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண