பங்குச் சந்தை இன்று சரிவுடன் தொடங்கியது. ரஷ்யா –உக்ரை போரின் விளைவு பங்குச் சந்தையை கடுமையாக பாதித்துள்ளது.


இந்திய பங்குச் சந்தை நிலவரம் இன்று காலை முதல் வீழ்ச்சியுடன் காணப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, ஆரம்ப வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் பிஎஸ்இ 926. 89புள்ளிகள் அல்லது 1.09% குறைந்து 55,633.73 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டி 175.30 புள்ளிகள் அல்லது 1.04% சரிந்து 16,618.60 ஆக இருந்தது.


சென்செக்ஸ் பேக்கில் ஐசிஐசிஐ வங்கி 3.46% சரிந்து, ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி சுசூகி, ஹெச்டிஎஃப்சி ட்வின்ஸ், கோடக் மகிந்திரா வங்கி மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை தொடர்ந்து வீழ்ச்சியடைந்த்தன.


மறுபுறம், டாடா ஸ்டீல், எம் அண்ட் எம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட், என்டிபிசி மற்றும் டெக் மஹிந்திரா, நெஸ்லே, ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் இருந்தன.


முந்தைய அமர்வில், 30-பங்கு சென்செக்ஸ் குறியீடு 388.76 புள்ளிகள் அல்லது 0.70% உயர்ந்து 56,247.28 ஆக இருந்தது. அதேபோல், நிஃப்டி 135.50 புள்ளிகள் அல்லது 0.81% உயர்ந்து 16,793.90 இல் முடிவடைந்தது.


மஹாசிவராத்தி விழாவினை முன்னிட்டு பங்குச் சந்தைகள் மார்ச் 1 ஆம் தேதி மூடப்பட்டன.


ஆசியா, டோக்கியோ, ஹாங்காங், சியோல் மற்றும் ஷாங்காய் பங்குச்சந்தைகள் இடைக்கால ஒப்பந்தங்களில் ஆழ்ந்த நஷ்டத்துடன் வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்க பங்குச் சந்தைகள் இரவு நேர அமர்வில் கடுமையாக சரிவைச் சந்தித்தன.


சர்வதேச எண்ணெய் பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 5.73% உயர்ந்து 110.98 டாலராக ஆக இருந்தது.


ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அதன் நிதி நிறுவனங்களை ஸ்விஃப்ட் (SWIFT) உலகளாவிய கட்டண முறையிலிருந்து விலகுவது ஆகியவை காரணங்களால் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது.


இதனால் ரூபாயின் மதிப்பு கடந்த டிசம்பர் மாததிற்கு பிற்கு கடுமையாக சரிவடைந்துள்ளது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண