Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 300.24 அல்லது 0.51% புள்ளிகள் உயர்ந்து 58,392.72 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 86.25 அல்லது 0.50% புள்ளிகள் உயர்ந்து 17,193.75 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
லாபம்-நஷ்டம்
பஜாஜ் பின்சர்வ், ஹின்டல்கோ, எச்டிஎஃப்சி லைஃப், லார்சன், எம்எம், எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ், யுபிஎல், ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, அல்ட்ரா டெக் சிமெண்ட், மாருதி சுசிகி, விப்ரோ, சன் பார்மா, பாரதி ஏர்டெல், கிராசிம், இன்போசிஸ், அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
கோல் இந்தியா, சிப்ளா, அப்போலோ மருத்துவமனை, எச்டிஎஃப்சி வங்கி, நெஸ்டீலே, டைட்டன் கம்பெணி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
கடந்த சில நாட்களாவே இந்திய பங்குச்சந்தையானது சரிவுடன் காணப்பட்ட நிலையில், இன்று ஏறு முகத்தில் வர்த்தகம் காணப்பட்டது. பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி நேற்றைய வர்த்தக முடிவில் பங்குச்சந்தை 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது முதலீட்டளார்கள் மத்தியில் நிம்மதி அளித்துள்ளது.