Share Market: ஏற்றத்தில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை....100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்...லாபத்தில் எஸ்பி, எச்டிஎஃப்சி பங்குகள்...

Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

Continues below advertisement

Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

Continues below advertisement

மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 172 அல்லது  0.29 % புள்ளிகள் உயர்ந்து 60,458.47 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 57.90 அல்லது 0.33% புள்ளிகள் உயர்ந்து 17,779.40 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.  கடந்த இரண்டு நாட்களாகவே பங்குச்சந்தை மந்தமாகவே உள்ளது. ஏற்றத்தில் தொடங்கினாலும் சென்செக்ஸ், நிப்ஃடி புள்ளிகள் மந்தமாகவே இருந்தன. நேற்று தொடக்க வர்த்தகத்தில் சென்செக்ஸ் 70 புள்ளிகள் மட்டுமே உயர்த்தன. இன்று சற்று முதலீட்டளார்களை ஆறுதல்படுத்தும்படி சென்செக்ஸ் 170 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

லாபம்-நஷ்டம்

அதானி போர்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹின்டல்கோ, பஜாஜ் பின்சர்வ், இன்போசிஸ், எச்சிஎல் டெக், டிசிஎஸ், கிராசிம்,விப்ரோ, ரிலையன்ஸ், யுபிஎல், டெக் மகேந்திரா, ஐடிசி, அப்போலோ மருத்துவமனை, டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி வங்கி, ஓஎன்ஜிசி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எம்எம், நெஸ்டீலே, லார்சன், பிரிட்டானியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

பாரதி ஏர்டெல், கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், சிப்ளா,  ஹிரோ மோட்டோகோர்ப், என்டிபிசி, லார்சன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

வட்டி விகிதம் உயருமா?

இந்திய ரிசர்வ் வங்கியானது, பணவீக்கம் குறித்து முக்கிய முடிவுகளை இன்று எடுத்தது. மூன்று நாட்கள் நடந்த கூட்டத்தில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் வீடு, வாகன கடன்களின் வட்டி விகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெப்போ வட்டியை தொடர்ச்சியாக 6ஆவது முறையாக உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.

இதனால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டாமல், லாபம் ஈட்டுவதிலேயே ஆர்வத்தை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ரூபாயின் மதிப்பு:

இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து  82.66 ரூபாயாக உள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola