Share Market opened : இந்திய பங்குச்சந்தை இன்று காலை சரிவுடன் தொடங்கியுள்ளது.
இந்திய பங்கு சந்தை சரிவுடன தொடங்கி வர்த்தமாகி வருகிறது. மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 93.93 புள்ளிகள் சரிந்து 60,833.50 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 114.00 புள்ளிகள் சரிந்து 18,018.30 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
லாபம்-நஷ்டம்
ஓன்ஜிசி, பஜாஜ் பின்சர்வ், இன்போசிஸ், எச்சிஎல் டெக், அதாணி போர்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, பிபிசிஎல், பாரதி ஏர்டெல், விப்ரோ, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஹின்டல்கோ, டெக் மகேந்திரா, ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், ஐடிசி, எச்டிஎஃப்சி லைப், லார்சன், நெஸ்டீலே உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
டெட்டன் கம்பெணி, யுபிஎல், என்டிபிசி, கோடக் மகேந்திரா, ஐசிஐசிஐ வங்கி, கோல் இந்தியா, பிரிட்டானியா, எம்எம், மாருதி சுசிகி, சிப்ளா, பஜாஜ் பின்சர்வ், அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம்கண்டுள்ளன.
கொரோனா தாக்கம்
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கிகளானது தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் போர் 10 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இதுவும் பங்குச்சந்தைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டுமின்றி, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கமானது அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.