Share Market opened : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கி உள்ளது.


இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 620.66 புள்ளிகள் குறைந்து 60,205.56 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி158.55 புள்ளிகள் குறைந்து 17,968.80  புள்ளிகளாக உள்ளது.






லாபம்-நஷ்டம்


சிப்ளா, சன்பார்மா, எச்சிஎல் டெக் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


அதாணி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், அதாணி என்டர்பிரிஸ், ஹிண்டல்கோ, எஸ்பிஐ, மாருதி சுசிகி, யுபிஎல், லார்சன், எச்டிஎஃப்சி வங்கி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹிரோ மோட்டாகோர்ப், விப்ரோ, கோல் இந்தியா, இன்போசிஸ், எம்எம், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பின்சர்வ், பவர் கிரட் கார்ப், ஐசிஐசிஐ வங்கி, பிரிட்டானியா, டெட்டன் கம்பெணி, பாரதி ஏர்டெல், கிராசிம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


கொரோனா தாக்கம்


பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கிகளானது தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் போர் 10 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இதுவும் பங்குச்சந்தைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.


இதுமட்டுமின்றி, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கமானது அதிகரித்து வருகிறது.  இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தையானது மந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்  முதலீட்டாளர்கள் பங்குகளை வாக்குவதைவிடுத்து லாபநோக்கம் கருதி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.


ரூபாயின் மதிப்பு






இந்நிலையில் இன்று காலை தொடங்கிய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 82.79 ரூபாயாக உள்ளது.