Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 165.50 அல்லது 0.30% புள்ளிகள் உயர்ந்து 59,271.94 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 52.75 அல்லது 0.27% புள்ளிகள் உயர்ந்து 17,450.80 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
லாபம்-நஷ்டம்
பஜாஜ் பைனான்ஸ், ஓஎன்ஜிசி, எச்டிஎஃப்சி, டைட்டன் கம்பெணி, கோல் இந்தியா, ஐடிசி, பிபிசிஎல், லார்சன், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ், டெக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், கோடக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
எச்சிஎல் டெக், அப்போலோ மருத்துவமனை, ஹின்டல்கோ, எம்எம், ஆக்சிஸ் வங்கி, கிராசிம், டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட், என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
வட்டி விகிதம் உயருமா?
இந்த வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை பலத்த அடிவாங்கியது. மகாவீர் ஜெயந்தி விடுமுறைக்கு பிறகு இன்ற காலை தொடங்கிய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தியா ரிசர்வ வங்கியின் 2 நாள் நாணய கொள்கை கூட்டம் கடந்த 3ஆம் தேதி தொடங்கியது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து நாளை வெளியாகும் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படலாம் என்று எதிபார்க்கப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அந்நாட்டு பிராந்திய வங்கிகள் திவாலாகும் நிலையிலும் வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் மதிப்பு:
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 24 காசுகள் அதிகரித்து 82.08 ஆக உள்ளது என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.