Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 211 அல்லது 0.36% புள்ளிகள் உயர்ந்து 59,779.56 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 51.25 அல்லது 0.29% புள்ளிகள் உயர்ந்து 17,670.00 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. கடந்த 3 நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை சரிவில் காணப்பட்ட நிலையில், இன்று ஏற்றத்தில் வர்த்தகம் தொடங்கியிருப்பது முதலீட்டளார்களுக்கு சற்று நிம்மதியாக உள்ளது.


லாபம்-நஷ்டம்


டைட்டன் கம்பெணி, அதானி போர்ட்ஸ், ஐடிசி, டெக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ், லார்சன், விப்ரோ, பிரிட்டானியா, எச்டிஎஃப்சி, டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, எச்சிஎல் டெக், நெஸ்டீலே, ஹிரோ மோட்டோகோர்ப், எம்எம், டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், மாருதி சுசிகி, இன்போசிஸ், கோடக் மகேந்திரா, எச்டிஎ ஃப்சி, அல்ட்ரா டெக் சிமெண்ட், சன் பார்மா, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


அப்போலோ மருத்துவமனை, ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, சிப்ளா, யுபிஎல், கிராசிம், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


காரணம்


கடந்த 3 நாட்கள் பங்குச்சந்தை சரிவை சந்தித்து வந்தது. அதுமட்டுமின்றி, பங்குச்சந்தையில் பல மாதங்களாக நஷ்டத்தை சந்தித்து வரும் பழைய வாடிக்கையாளர்கள், பங்குச்சந்தையில் தொடர முடியாமல் சவால்களை சந்தித்து வருகின்றனர். அதன் விளைவாக, கடந்த 9 மாதங்களில் பங்குச் சந்தையில் இருந்து 53 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர் என தேசிய பங்கு சந்தையின் தரவுகள் வழியாக தெரிய வந்துள்ளது.


 தொடர்ந்து 9ஆவது மாதமாக, தேசிய பங்கு சந்தையின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம், தேசிய பங்கு சந்தையில் 3.8 கோடி முதலீட்டாளர்கள் இருந்துள்ளனர். ஆனால், தற்போது 53 லட்சம் பேர் வெளியேறி உள்ளதால் அந்த எண்ணிக்கை 3.27 கோடியாக குறைந்துள்ளது. இதன் தாக்கத்தால் கூட பங்குச்சந்தை சரிவை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.







இந்நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.18 ஆக உள்ளது.