Share Market : ஏற்றத்தில் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை...300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்...முதலீட்டாளர்கள் நிம்மதி..!
Share Market Closing Bell : நீண்ட நாட்களாக சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.

Share Market Closing Bell: நீண்ட நாட்களாக சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 347.45 அல்லது 0.60% புள்ளிகள் உயர்ந்து 57,982.09 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 109.05 அல்லது 0.64% புள்ளிகள் உயர்ந்து 17,094.85 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
Just In




லாபம்-நஷ்டம்
எச்.சி.எல் டெக், ஹின்டல்கோ, அல்ட்ரா டெக் சிமெண்ட், யுபிஎல், நெஸ்லே, டாடா கான்ஸ், டாடா ஸ்டீல், கோடக் மகேந்திரா, கிராசிம், எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஏர்டெல், இன்போசிஸ், பிரிட்டானியா, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, லார்சன், டெக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், அப்போலோ மருத்துவமனை, ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, எம்எம், டைட்டன் கம்பெணி, கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின.
ஐடிசி, மாருதி சுசிகி, சிப்ளா, சன் பார்மா, எச்யுஎல், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.