இந்திய பங்கு சந்தையிலிருந்து, வெளிநாட்டு நிறுவனங்களின் வெளியேற்றம் காரணமாக மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ்,  419.85 புள்ளிகள் குறைந்து 60,613.70 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 128.80 புள்ளிகள் குறைந்து 18,028.20 புள்ளிகளாக உள்ளது.


இன்று காலை தொடங்கிய மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 280.36 புள்ளிகள் குறைந்து 60,753.19 ஆக புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 87.35 புள்ளிகள் குறைந்து 18,069.65 புள்ளிகளாக இருந்தது.


லாபம்-நஷ்டம்:


கோல்கேட், லுபின், கோல் இந்தியா, கோடக் மகேந்திரா, சிப்ளா, சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.


டாடா மோட்டர்ஸ், அதானி  போர்ட்ஸ், பிரமல் என்டர், ராம்கோ சிமெண்ட், எம்&எம், டைட்டன் கம்பெனி, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டன.


மேலும், சீனாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கச்சா எண்ணெய் தேவையானது உலகளவில் குறைய வாய்ப்புள்ளதால், கச்சா எண்ணெய்யின் விலை குறையும் சூழல் உள்ளது. 



இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்கு டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 33 காசுகள் குறைந்து 81.80 ருபாயாக ஆக உள்ளது.