நுகர்வோர் விலையின் பணவீக்கம் மிதமாக காணப்படுகிற சூழல் காணப்படுவதால் இன்றைய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. 


இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், 174 புள்ளிகள் அதிகரித்து 61,579 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி-50, 60 புள்ளிகள் அதிகரித்து 18,300 புள்ளிகளாக உள்ளது. 






லாபம்- நஷ்டம்


ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபினான்ஸ், பாரதி ஏர்டெல், சன் பார்மா, டாடா ஸ்டீல், விப்ரோ, மாருதி சுசுகி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.


அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, பவர் கிரிட், ரிலையன்ஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.


இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வை நிறுத்தும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்திய பங்குச் சந்தை எழுச்சியைத் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் காரணமாக இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் காணப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


ரூபாய் மதிப்பு:






இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 14 காசுகள் சரிந்து 81.81 ரூபாயாக ஆக உள்ளது.


சீனாவில் நிலவி வரும் கொரோனா தாக்கத்தால், அங்கு பல்வேறு பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவை குறைந்து காணப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய்  விலை குறைய  வாய்ப்புள்ளது. இதனால், இனி வரும் காலங்களில் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு வலுவடையும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.