மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 909. 64 புள்ளிகள் உயர்ந்து 60, 841 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 243.65 புள்ளிகள் உயர்ந்து 17,854.05 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.
கடந்த வாரத்தில் பங்குச்சந்தை கண்ட பெரும் சரிவால் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே சென்செக்ஸ் சென்றது. இந்நிலையில், மீண்டும் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்றது முதலீட்டாளர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்றம் - சரிவு பங்குககள்:
அதானி போர்ட்ஸ், அப்போலோ மருத்துவமனை, ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, எஸ்.பி.ஐ, ரிலையன்ஸ், டிசிஎஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
விப்ரோ, டெக் மகேந்திரா, ஹிண்டல்கோ, டிவிஸ் லேப்ஸ், பிபிசிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டன.
ரூபாயின் மதிப்பு:
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 34 காசுகள் உயர்ந்து 81.86 ரூபாயாக உள்ளது.