மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ்  126.76 புள்ளிகள் அதிகரித்து 57,653.86 புள்ளிகளாகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 40.65 புள்ளிகள் அதிகரித்து 16,985.70 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. 


தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி இன்று மிகவும் ஏற்ற இறக்கமான வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது. ஏற்ற இறக்கங்களை கண்ட அது இறுதியில் சுமார் 40 புள்ளிகள் அதிகரித்து பச்சை நிறத்தில் முடிந்தது.




லாபம்-நஷ்டம்:


கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சிப்லா, சன் பார்மா, எஸ்பிஐ ஆகிய பங்குகள் ஏற்றத்திலும், அதானி போர்ட்ஸ், பவர் கிரிட் கார்ப், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின.


பிஎஸ்இ-யில் ஏஐஏ இன்ஜினியரிங், பாரத் வயர் ரோப்ஸ், கேரியர் பாயிண்ட், சையண்ட் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.


துறைகளை பொறுத்தவரை ஆட்டோமொபைல், கேப்பிட்டல் குட்ஸ், பவர் மற்றும் ரியாலிட்டி துறைகளின் பங்குகள் 0.5 முதல் 2 சதவீதம் வரை சரிந்தன.


கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தையானது சரிவுடன் காணப்பட்டு வந்தது.  இந்நிலையில் இன்றைய நாள் வர்த்தக முடிவில் பங்குச் சந்தை சற்று ஏற்றத்துடன் முடிவடைந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.


ரூபாய் மதிப்பு:




அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் அதிகரித்து 82.37 ஆக உள்ளது என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. 


Also Read: Budget: இரண்டு நாட்களுக்குப் பிறகு கூடும் சட்டமன்றம்; மாநகராட்சியில் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் சென்னை மேயர்! இன்றைய அதிரடி நிகழ்வுகள்!


Also Read: Gold, Silver Price: ஹாப்பி நியூஸ்.. குறைந்த தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம் இதுதான்!