உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பணவீக்கம் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் காரணமாக இந்திய பங்கு சந்தை சரிவை சந்தித்து வருகின்றன.
பங்கு சந்தை நிலவரம்:
இன்றைய நாள் முடிவில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 132.70 புள்ளிகள் குறைந்து 59,900.37 புள்ளிகளாகவும் , தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 132.70 புள்ளிகள் குறைந்து 17,859.45 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸ்-30ல் உள்ள 30 நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் ஏற்றத்திலும் 25 நிறுவனங்களும் சரிவிலும் காணப்பட்டன.
லாபம் - நஷ்டம்:
ஐடிசி, லார்சன், எம் & எம், நெஸ்ட்லே, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் கண்டன. ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபினான்ஸ், ஏர்டெல், கோல் இந்தியா, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை கண்டன.
சரிவுக்கு காரணம்:
பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்படுத்தும் விதமாக மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடும் சற்று குறைந்ததும், இந்திய பங்குச் சந்தைக்கு சரிவை ஏற்படுத்தியதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரூபாயின் மதிப்பு:
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து 82.71 ரூபாயாக உள்ளது.