பங்குகளை வாங்குவதில், முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதன் காரணமாக, இரண்டாவது நாளாக இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது.


சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 18 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது. மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 126. 41 புள்ளிகள் உயர்ந்து 61,294.20 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 35.10 புள்ளிகள் உயர்ந்து 18,232.55 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.






உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, நாட்டில் சில்லறை விலை பணவீக்கம் பல மாதங்களாக உயர்ந்து இருந்தது,  அமெரிக்க பெடரல் வங்கயின் வட்டி உயர்வு, உலக பொருளாதார மந்தநிலை குறித்த பயம் இருந்த போதிலும், இன்றைய நாள் பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது.


ரூபாயின் மதிப்பு:






அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 5 காசுகள் குறைந்து 82.66 ரூபாயாக உள்ளது.