Share Market : இன்று காலை சரிவில் தொடங்கி வர்த்தகமாகி வந்த இந்திய பங்கு சந்தையானது, முடிவிலும் சரிவுடன் காணப்பட்டது.


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 139.18 புள்ளிகள் குறைந்து 59,605.80 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 43.05 புள்ளிகள் குறைந்து 17,51. 25 புள்ளிகளாகவும் வர்த்தக முடிவில் காணப்பட்டது. 


இன்று காலை தொடக்கத்தில்,  மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 47.71 அல்லது  0.08% புள்ளிகள் குறைந்து 59,697.27 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 15.45 அல்லது 0.09% புள்ளிகள் குறைந்து 17,538.85 புள்ளிகளாகவும் வர்த்தகமானது. பங்குச்சந்தையானது சரிவுடன் இருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.




லாபம் - நஷ்டம்: 


சென்செக்ஸ்-ல் ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன், ஹெச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.  சிமென்ட் மற்றும் சன் பார்மா ஆகியவற்றின் பங்குகள் ஏற்றத்தில் காணப்பட்டன.


தாக்கம்:


அமெரிக்க டாலரை வலுப்படுத்தும் நோக்கில், வட்டி விகிதத்தை அமெரிக்க மத்திய வங்கி உயர்த்த உள்ளதாக கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையை விட்டு வெளியேறி வருகின்றன.


ரூபாய் மதிப்பில் இந்தியாவில் முதலீடு செய்வதைவிட அமெரிக்காவில் டாலரில் முதலீடு செய்தால் லாபம் அதிகம் பெறலாம் என்ற நம்பிக்கையில், முதலீட்டாளர்கள் பலரும் இந்திய பங்கு சந்தையில் வெளியேறி வரும் சூழல் நிலவுகிறது.இதன் காரணமாக இந்திய பங்குச் சரிவுடன் காணப்படுகின்றன என பங்கு சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.







அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் அதிகரித்து, 82.73 காசுகளாக உள்ளது என பிரஸ்ட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.