கடந்த வாரம் முடிவில், பெரும் சரிவில் முடிவடைந்த இந்திய பங்கு சந்தை, இந்த வாரத்தில் தொடக்க நாளிலும் சரிவுடன் முடிவடைந்தது.
பங்கு சந்தை நிலவரம்:
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 311.03 புள்ளிகள் சரிந்து 60,691 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 99.60 புள்ளிகள் சரிந்து 17,844.60 புள்ளிகளாகவும் இன்றைய நாள் முடிவில் காணப்பட்டன.
எல் அண்ட் டி, ஏபிபி, கம்மின்ஸ் இந்தியா, ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா, அல்ட்ராடெக், ஜேகே சிமெண்ட், டெக் மஹிந்திரா, எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் மற்றும் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ஆகிய நிறுவனத்தின் பங்குகள் ஏற்றத்தில் காணப்பட்டன.
நிஃப்டி 50-ல் திவிஸ் லேப், அல்ட்ராடெக் சிமெண்ட், டெக் மஹிந்திரா, பவர் கிரிட் மற்றும் ஹிண்டால்கோ ஆகியவை அதிக லாபத்தையும், அதானி எண்டர்பிரைசஸ், சிப்லா, பிரிட்டானியா, பிபிசிஎல் மற்றும் யுபிஎல் ஆகியவை அதிக இழப்பையும் சந்தித்தன.
பணவீக்கத்தை நீண்ட காலத்துக்கு கட்டுப்படுத்தும் விதமாக, அமெரிக்க மத்திய வங்கியானது, வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்த வாய்ப்புள்ளதாக பங்கு சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய பலரும் தயங்குவதாலும், பலரும் தங்கள் முதலீடு செய்த பங்குகளில் இருந்து வெளியேறி, வெளிநாடுகளில் முதலீடு செய்து வருவதாலும் இந்திய பங்கு சந்தை சரிவை காண்பதற்கு முக்கிய காரணம் என பங்கு சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரூபாய் மதிப்பு:
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் அதிகரித்து 82.73 ஆக உள்ளது.
Also Read: Gold, Silver Price: இன்றும் குறைந்தது தங்கம் விலை... மக்கள் மகிழ்ச்சி... இன்றைய நிலவரம் இதுதான்!