பணவீக்கத்தை கட்டுப்படுத்த, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என தகவல் வெளியாகியுள்ளதால், இந்திய பங்கு சந்தை இன்று சரிவை சந்தித்தன. குறிப்பாக அதானி எண்டர்ப்ரைசர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.11 சதவிகிதம் வரை சரிவை சந்தித்தன. 


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 316.94 புள்ளிகள் சரிந்து 61,002.57 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 91.65 புள்ளிகள் சரிந்து 17,975.70 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.  இந்த வாரத்தின் 4 நாட்களும் பங்குச்சந்தையானது ஏற்றத்தில் இருந்து வந்த நிலையில், இன்று வர்த்தக தொடக்கத்திலும், முடிவிலும் சரிவால் பங்குச்சந்தை பலத்த அடிவாங்கியது.


இன்று காலை மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 226.49 அல்லது  0.37 % புள்ளிகள் உயர்ந்து 61,093.02 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 60.15 அல்லது 0.33% புள்ளிகள் உயர்ந்து 17,975.70 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.






லாபம் - நஷ்டம்:


அல்ட்ரா டெக் சிமெண்ட், அதானி போர்ட்ஸ், ஆசியன் பெயிண்ட்ஸ், பிபிசிஎல், கோல் இந்தியா, லார்சன், மாருதி சுசுகி, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.


அதானி எண்டர்ப்ரைசர்ஸ், அப்போலோ மருத்துவமனை, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபினான்ஸ், பாரதி ஏர்டெல், பிரிட்டாணியா, சிப்லா, இண்டல்கோ, இன்ஃபோசிஸ், இன்டஸ் இண்ட் பேங்க், கோடாக் மகேந்திரா, டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ் விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டன.


அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பில்லை என கூறப்படுவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் , இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இப்படி சாதகமான சூழல் இருந்து வந்த நிலையில், இந்திய பங்குச்சந்தை  இன்று வர்த்தக தொடக்கத்தில்  பலத்த அடிவாங்கியது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் குறைந்து 82. 83 ரூபாயாக உள்ளது.