நீங்கள் வருமான வரி செலுத்துபவரா, பணப் பரிவர்த்தனைகளுக்கு டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துபவரா அல்லது தேசிய ஓய்வூதிய அமைப்பில் முதலீடு செய்துள்ளவரா என்றால் செப்டம்பரில் வரவிருக்கும் பல முக்கியமான மாற்றங்கள் உங்கள் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்


வருமான வரி தாக்கல்:


வருமான வரி செலுத்துபவர்கள், டாக்ஸ் ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலம் 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.  ஆகஸ்ட் 1, 2022 அன்று அல்லது அதற்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட வரிக் கணக்கைச் சரிபார்ப்பதற்கான காலக்கெடு 120 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வருமான வரிக் கணக்கை நீங்கள் தாக்கல் செய்திருந்தால், செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் வருமானத்தை சரிபார்க்க வேண்டும். 30 நாட்களை கடந்து தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பரிவர்த்தனை கார்டுகளில் மாற்றம்:


செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் ஆன்லைன் பண பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் மற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கார்டுகளில் உள்ள எண்களை பதிவு செய்து பரிமாற்றம் செய்வதற்கு பதிலாக டோக்கனைஸ் சிஸ்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனிமேல் டோக்கன்களை வைத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இந்த டோக்கன்களால் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பரிவர்த்தனை அட்டை கட்டணம் :


பண பரிவர்த்தனைகளுக்காக பயன்படுத்தப்படும் டெபிட் மற்று கிரடிட் கார்டுகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வை செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக பல்வேறு வங்கிகள் தெரிவித்துள்ளன.


உதாரணமாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) பல வகை டெபிட் கார்டுகளுக்கான கட்டணங்களை செப்டம்பர் 6 முதல் உயர்த்தியுள்ளது. IOB-ல் இருந்து ரூபே கிளாசிக் டெபிட் கார்டுக்கான வழங்கல் கட்டணம் ரூ. 50 ஆகவும், இரண்டாம் ஆண்டிலிருந்து ஆண்டு கட்டணம் ரூ. 150 ஆகவும் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடல் பென்ஷன் யோஜனா


18-40 வயதுக்குட்பட்டவர்களுக்குள் வருமான வரி செலுத்துபவர்களில் அடல் பென்ஷன் யோஜனாவில் சேர செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாளாகும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் ஓய்வூதியத் திட்டமானது, அமைப்பு சாரா  தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியமாக மாதம் ரூ.1,000-5,000 வழங்குகிறது. இது 2015 இல் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது. 


சுங்கச்சாவடி கட்டணம்:


செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்கள், கன சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு 10 பைசா முதல் 52 பைசா வரை கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.