இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,961.32 அல்லது 2.54% புள்ளிகள் உயர்ந்து 79,117.11 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 557.35 அல்லது 2.39% புள்ளிகள் உயர்ந்து 23,907.25 ஆகவும் வர்த்தகமாகியது.
பங்குச்சந்தையில் வங்கி, நிதி, ஐ.டி. எனர்ஜி உள்ளிட்ட துறைகளில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியது, அதானி குழும பங்குகளின் மதிப்பு உயர்வு ஆகியவற்றால் பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளது.
2.57 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 2,039.44 புள்ளிகளும் நிஃப்டி 587.90 புள்ளிகளும் உயர்ந்தது. சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் 2 சதவீதம் உயர்ந்துள்ளது.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
டி.சி.எஸ். டைட்டன் கம்பெனி ஸ்ரீராம் ஃபினான்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஈச்சர் மோட்டர்ஸ், விப்ரோ, அதானி போர்ட்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு., டாடா ஸ்டீல், சன் ஃபார்மா, எம்&எம், ஹிண்டால்கோ, டாடா மோட்டர்ஸ், எஸ்.பி.ஐ., பஜாஜ் ஃபின்சர்வ், பி.பி.சி.எல், இந்தஸ்லேண்ட் வங்கி, என்.டி.பி.சி., ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், க்ரேசியம், பிரிட்டானியா, டி.சி.எஸ்., பவர் கிரிட் கார்ப்ரேசன், டைட்டன் கம்பெனி, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், நெஸ்லே, ரிலையன்ஸ், லார்சன், ஐ.டி.சி., டாடா கான்ஸ் ப்ராட், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபினான்ஸ், அதானி போர்ஃப்ஸ், கோல் இந்தியா, பாரத் எலக்ட்ரிகல்ஸ், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், சிப்ளா, கோடாக் மஹிந்திரா, பிரிட்டானியா, சன் ஃபார்மா, ஹிண்டால்கோ, எஸ்.பி.ஐ. எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஆக்சிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மட்டும் நஷ்டத்துடன் வர்த்தகம் ஆகியது.
இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு மாதங்களாகவே பெரும்பாலும் சரிவுடன் வர்த்தகமானது. சர்வதேச பொருளாதரா சூழல், அமெரிக்க அதிபர் தேர்தல், இஸ்ரேல் - பாலஸ்தீன போர் உள்ளிட்ட பல காரணங்களால் வரலாற்றில் பங்குச்சந்தை கடும் சரிவை சந்ததித்தது.இந்த வாரத்தில் கூட கெளதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் ஊழல் புகார் காரணமாக பங்குச்சந்தை சரிவில் இருந்தது. இந்நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எஸ்.பி.ஐ. ஆகிய வங்கி துறைகள், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். உள்ளிட்ட பெரும் ஐ.டி. நிறுவனங்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆகியவை லாபத்துடன் வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது.
அதானி குழுமம் - பங்குகள் சரிவில் இருந்து மீண்டது:
அதானி குழும பங்குகள் நேற்றைய வர்த்தக நேரத்தில் 20% சரிவை சந்தித்தது. இன்றைய வர்த்தக நேரத்தில் அதானி எண்டர்பிரைசிஸ் 2.5%, அம்புஜா சிமெண்ட்ஸ் 6%, ACC 4% உயர்ந்திருந்தது.