இன்றைய வர்த்தம் தொடங்கிய நிலையில், சரிவுடன் இருந்த பங்குச்சந்தை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5% உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து பங்குச்சந்தை பரப்பரபுடன் வர்த்தமாகி வருகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 241.86 அல்லது 0.44% புள்ளிகள் உயர்ந்து 55,266. 79 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல, தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டி 48.25 அல்லது 0.28% புள்ளிகள் உயர்ந்து 16,464 .60 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. ரெப்கோ வட்டி விகிதம் உயர்ந்திருப்பது பங்குச்சந்தையில் நாள் முழுவதும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்