இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளே ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. சென்செக்ஸ் குறிப்பாக 260.66 புள்ளிகள் அல்லது 0.44 உயர்ந்து 60,053 ஆக உள்ளது. மேலும் நிஃப்டி 80.85 புள்ளிகள் அல்லது 0.45 சதவீதம் உயர்ந்து 17,914.20 புள்ளிகள் ஆக உள்ளது. பங்குச்சந்தையில் சுமார் 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகின்றன.
ஹெ.டி. எஃப். சி. வங்கி, டாகடர். ரெட்டி, எல். அண்ட் டி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் கோடாக் வங்கி உள்ளிட்டவைகள் லாபகரமாக வர்த்தகமாகி வருகின்றன.
முதலீட்டாளர்கள் இன்று வெளியாக உள்ள Index of Industrial Production (IIP) மற்றும் Consumer Price Index (CPI) உள்ளிட்ட தகவல்கள் வெளியாக உள்ளன. இது பங்குச்சந்தையில் மாற்றம் ஏற்படுத்தும் என்பதால், ரிசர்வ் வங்கி வெளியிடும் பணவீக்கம் பற்றிய இந்த தகவலுக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர்.
வல்லுநர்களின் கருத்து:
உலகத்தில் நிலவிவரும் பொருளாதார சூழல் ஆமற்றும் முதலீட்டு சூழல்களை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்தியாவில் சில நாட்களுக்கு பங்குச்சந்தை சரிவை சந்திக்கு என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இந்தியாவில் தற்போது இருக்கும் பொருளாதார நிலை மற்றும் குறையும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை பங்குச்சந்தை சரிவை கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கின்றனர்.